bestweb

தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தின் புதிய பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

12 Jun, 2025 | 08:31 PM
image

இந்திய அளவிலான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'குபேரா' திரைப்படத்தில் இடம்பெற்ற 'பீப்பி பீப்பி டும் டும் டும் ' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

'குபேரா' படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற மூன்றாவது பாடலான 'பீப்பி பீப்பி டும் டும் ' எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் சைதன்யா பிங்களி எழுத, பின்னணிப் பாடகி இந்திராவதி சௌஹான் பாடியிருக்கிறார். 

படித்த பெண்கள் தங்கி இருக்கும் விடுதியின் பின்னணியில் அவர்களின் திருமணம் சார்ந்த கனவுகளும், அது தொடர்பான தங்களின் எதிர்பார்ப்புகளும், நிகழ்கால நிகழ்வுகளும் இந்தியத்தனத்துடனான ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பஞ்சாபியர்களின் கலாச்சார இசையான பாங்க்ரா எனும் இசையில் ஒலிக்கும் இந்த பாடல்  இளம் பெண்களையும் , இசை ரசிகைகளையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.

சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படத்தில் தனுஷ் , நாகார்ஜுனா , ராஷ்மிகா மந்தானா ஆகியோர் முன்னணி வேடத்தில் நடிக்கிறார்கள். இதனை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல் எல் பி மற்றும் அமீகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, சோனாலி நரங் வழங்குகிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right