நட்சத்திர வாரிசும், தனித்துவமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் கலைஞருமான அதர்வா கதையின் நாயகனாக நடித்திருக்கும்' டி என் ஏ ' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
'ஒரு நாள் கூத்து', 'மான்ஸ்டர்', 'பர்கானா' ஆகிய படங்களை இயக்கி தரமான படைப்பாளி என்ற முத்திரையை பெற்றிருக்கும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் ' டி என் ஏ' திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன், சகி சிவா, பிரவீண் சைவி, சத்ய பிரகாஷ் அனல் ஆகாஷ் மற்றும் ஜிப்ரான் வைபோதா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
ஃபீல் குட் பேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.
எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், ராஜூ முருகன், கணேஷ் கே. பாபு, ஹேமந்த் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசுகையில், ''அதர்வாவும், நிமிஷாவும் இல்லையென்றால் இந்த படம் இல்லை. ஏன்? என்பது இந்தப் படத்தை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.
இது ஒரு கிரைம் வித் எக்சன் டிராமா. எம்முடைய படைப்புகளில், ஒரு இயக்குநராக எந்த சமரசமும் செய்து கொள்ளாத படைப்பாகவும் 'டி என் ஏ ' இருக்கும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM