bestweb

வங்கி கொள்ளையை நகைச்சுவையுடன் விவரிக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்'

Published By: Digital Desk 2

12 Jun, 2025 | 08:34 PM
image

தமிழ் திரையுலகில் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நாயகனான நடிகர் வைபவ் கதையை வழி நடத்திச் செல்லும் முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படம் - வங்கி கொள்ளையை நகைச்சுவையுடன் விவரிக்கும் படம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் - அருண் கேசவ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி ஆகியோருடன் தமிழ் சினிமாவில் கலை சேவை செய்து வரும் முன்னணி நகைச்சுவை நட்சத்திர கலைஞர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நடித்திருக்கிறார்கள். டிஜோ டோமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை பி. டி. ஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் பங்கு பற்றினர்.

இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் பேசுகையில், '' எட்டு ஆண்டுகளுக்கு முன் இந்நிறுவனத்தின் தலைமை பிரதிநிதியான மனோஜ் பினோவிடம்  இக்கதையை விவரித்தேன்.

அதன் பிறகு தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரனிடம் கதையை சொன்னதும் படத்தின் பணிகள் தொடங்கியது. இப்படத்திற்கு வைபவ் தான் நாயகன் என தெரிவு செய்து, அவரிடம் கதையை சொல்லியதும் அவரும் சம்மதம் தெரிவிக்க, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.

இந்த திரைப்படத்தில் வங்கியில் நடைபெறும் கொள்ளையை வயிறு வலிக்க சிரிக்கும் வகையில் நகைச்சுவையுடன் உருவாக்கி இருக்கிறோம்.

முகம் சுழிக்கும் வகையிலான எந்த காட்சிகளும் இப்படத்தில் இல்லை. அதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right