எம்மில் பலருக்கு அவர்களுடைய ஜாதகத்தில் திசை நடத்தும் கிரகம் வலிமையாக இருந்தால்.. அவர்கள் இந்த பிறவியில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சுப பலன்களை பூரணமாகவும், விரைவாகவும் கிடைக்க விரும்பினால்.. அதற்கான சூட்சம குறிப்புகளையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கி இருக்கிறார்கள்.
சூரியன் முதல் கேது பகவான் வரையிலான கிரகங்களின் திசை நடக்கும் போது அவர்களுக்கான பிரத்யேக விலங்கினை புகைப்படமாக உடன் வைத்திருந்தாலோ அல்லது அதனை உங்களது அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ, விற்பனை நிலையத்திலையோ வைத்திருந்தால் லாபமும், பலனும் கிடைப்பது உறுதி.
இனி எந்தெந்த திசையில் என்னென்ன புகைப்படங்களையும், குறிப்புகளையும் பாவிக்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சூரிய திசை - மயில்- தேர் - ஆகிய புகைப்படங்களை உடன் வைத்திருப்பது பலன் தரும். அதே தருணத்தில் உங்கள் ஊருக்கு அருகே ஏதேனும் ஆலயத்தில் தேரோட்டம் நடந்தால் அதில் பங்கு பற்றினாலும் அல்லது புனித யாத்திரைக்காக அல்லது வணிக நோக்கத்திற்காக அடிக்கடி மகிழுந்து பயணத்தை மேற்கொண்டாலும் சூரிய பகவானின் அருள் கிடைக்கும்.
சந்திர திசை - முத்து - விமானம் ஆகிய இவற்றை புகைப்படங்களாக பாவித்தால் லாபம் உண்டு.
செவ்வாய் திசை - அன்னப்பறவையை புகைப்படமாக இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதனை பாவிக்க வேண்டும்.
புதன் திசை - குதிரை புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம். குதிரை எந்த வண்ணத்தில் இருந்தாலும் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குதிரைகள் இருந்தாலும் அவை நின்ற நிலையிலும் ஓடும் நிலையில் இருந்தாலும் அந்தப் புகைப்படத்தை பாவிக்கலாம். சிலர் நேரடியாகவோ அல்லது காணொளி வாயிலாகவோ குதிரையை பார்த்து வந்தாலும் பலன் உண்டு.
குரு திசை - யானை புகைப்படத்தையும், யானையின் ஆசியையும் பெற்றாலும் பலன் உண்டு.
சுக்கிரன் திசை - கருடன் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டாலும் அல்லது கருடனை வானில் கண்டு தரிசித்தாலும் பலன் உண்டு.
சனி திசை - காகம் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம் அல்லது காகத்திற்கு உலர் திராட்சையை உணவாக அளிக்கலாம். இதனால் பலன் கிடைக்கும்.
ராகு திசை - ஆடு புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம். இந்த திசை நடக்கும் காலம் முழுவதும் ஆட்டிறைச்சி பசியாறுவதை முற்றாக தவிர்க்கலாம்.
கேது திசை - சிங்கம் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து பாவிக்கலாம். அருகில் ஏதேனும் மிருக காட்சி சாலையில் சிங்கம் இருந்தால். அதற்கு நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பார்க்கலாம்.
இந்த திசை நடத்தும் கிரகங்கள் பல ஆண்டுகாலம் நீடிப்பதால் அதற்குரிய பலன்களை பெறுவதற்கு எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் வழங்கிய சூட்சும குறிப்புகளை பாவித்து பலன் பெறுங்கள்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM