எட்டியாந்தோட்டை புனித மரியாள் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையில் 2025ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் போட்டிகள் வெகுவிமரிசையாக நடைபெற்றன.
இதில் 2020ஆம் ஆண்டு சாதாரண தர வகுப்பு அணி, சிறப்பாக விளையாடி சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில், ஜூன் 7, 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வின்சன்ட் பெரேரா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 33 அணிகள் பங்கேற்றன.
ஒவ்வொரு ஆண்டின் சாதாரண தர மாணவர்கள் அடங்கிய அணிகள் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியில் 2020 மற்றும் 2004 ஆம் ஆண்டு அணிகள் மோதின. போட்டியில் அபாரமாக விளையாடிய 2020 அணி வெற்றிப் பெற்றது. 2004 அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததுடன், 1997 ஆண்டு அணி மூன்றாமிடத்துக்கு வந்தது.
பழைய மாணவர்களின் ஒன்றுகூடலாக இந்த கிரிக்கெட் போட்டி மூன்றாவது முறையாக நடத்தப்பட்டது. இந்த விழா வெற்றிகரமாக நடைப்பெற பழைய மாணவர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் பழைய மாணவர் சங்கம் நன்றியை தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM