காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவிக்கு நேர்ந்த கதி ; உண்மையில் நடந்தது என்ன?

10 Jul, 2017 | 03:10 PM
image

(Vijithaa)

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 16 வயது சிறுமி கடந்த 7 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி மஹியங்கனை அளுத்ராம பகுதியை சேர்ந்த பதலயாய மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி என தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 5 ஆம் திகதி மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு தொடர்ந்து வழங்கப்பட்ட தடுப்பூசியின் போது பல முறை அவரின் உடலில் பல கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6 ஆம் திகதி நள்ளிரவில் வழங்கப்பட்ட தடுப்பூசியின் பின்னர் அவரது உடல் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக மாறியதாகவும்  7 ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.

மஹியங்கனை ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரி ஏ எம் சேனாரத்ன பண்டார இக்குற்றச்சாட்டு தொடர்பில் தெரிவித்ததாவது,

இம் மரணம் தொடர்பாக எமது நீதிமன்ற வைத்திய அதிகாரியினால் மரணப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்  மரணமடைந்த மாணவி நிமோனியாவினால் பீடிக்கப்பட்டு நுரையீரல் மற்றும் முக்கிய உறுப்புக்கள் பாதிப்படைந்தே மரணமடைந்துள்ளார் என உறுதிசெய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

“அணையா விளக்கு” போராட்டத்திற்கு அணிதிரளுங்கள் ;...

2025-06-22 10:30:30
news-image

சந்நிதியான் ஆச்சிரம முதல்வருக்கு ஐக்கிய நாடுகளின்...

2025-06-22 09:58:27
news-image

தனியார் விருந்தினர் விடுதியில் மின் தூக்கியில்...

2025-06-22 09:34:41
news-image

இன்றைய வானிலை

2025-06-22 06:20:32
news-image

தம்பலகாமம் கண்டி திருகோணமலை 98ம் கட்டை...

2025-06-22 00:57:55
news-image

யாழில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்...

2025-06-22 00:54:56
news-image

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் இன்று...

2025-06-22 00:22:48
news-image

நாணய நிதியத்துடனான நீடிக்கப்பட்ட கடன் வசதி...

2025-06-21 12:54:28
news-image

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட...

2025-06-21 21:27:01
news-image

பொது மன்னிப்பினை இரத்து செய்வதற்கு அரசாங்கம்...

2025-06-21 13:16:18
news-image

மன்னார் மாவட்ட சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக...

2025-06-21 20:40:23
news-image

இலஞ்சம் பெற்றதற்காக இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ...

2025-06-21 20:01:07