bestweb

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு வித்திடுவதற்காக ESU Kandy ஐ ESOFT ஆரம்பித்துள்ளது

Published By: Digital Desk 2

12 Jun, 2025 | 12:34 PM
image

இலங்கையில் உயர் கல்வியை வழங்குவதில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகின்ற ESOFT, மலைநாட்டின் தலைநகரில் உலகத்தரம் வாய்ந்த பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப்படிப்பு கல்வியை வழங்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள தனது சுயாதீன அங்கமான ESU Kandy ன் உத்தியோகபூர்வ ஆரம்பம் குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. 

இந்த விரிவாக்க நடவடிக்கையானது ESOFT ன் மூலோபாய பரிணாம மாற்றத்தைக் குறித்து நிற்பதுடன், அதன் பல்கலைக்கழக மட்ட கற்கைநெறி நிகழ்ச்சித்திட்டங்களை மேலும் பல்வகைப்படுத்தி, கல்வியில் மகத்துவம் மற்றும் சர்வதேச அளவில் அவற்றின் பொருத்தம் ஆகியவற்றில் தான் காண்பிக்கும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. 

2025 ஜுன் உள்வாங்கலுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுவதுடன், இலங்கையில் பரந்தளவில் மாணவர்கள் மத்தியில் சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பு மற்றும் மேற்பட்டப்படிப்பு கற்கைநெறிகளை கண்டியிலேயே கற்பதற்கான வாய்ப்பினை வழங்கி, கொழும்புக்கு வருவதற்கு முகங்கொடுக்கும் செலவு மற்றும் அசௌகரியங்களையும் போக்கியுள்ளது.    

ESU Kandy ன் புதிய வளாகம், மலைநாட்டின் தலைநகரில் உள்ள மிகப் பாரிய நகர பல்கலைக்கழகமாகத் திகழ்வதுடன், கலை மற்றும் வடிவமைப்பு (Art and Design), உயிரியல் விஞ்ஞானம் (Life Science), கணினி (Computing), பொறியியல் (Engineering), வணிகம் மற்றும் சட்டம் (Business and Law), மற்றும் மொழிகள் (Languages), கல்வி (Education), மற்றும் சமூவியல் (Sociology) உள்ளிட்ட பல்வகைப்பட்ட கற்கைநெறிகளை இது வழங்குகின்றது. அதன் விரிவான கற்கைநெறிகள் அனைத்தும் அடிப்படை முதல் பட்டப்படிப்பு, மேற்பட்டப்படிப்பு, மற்றும் கலாநிதிக் கற்கை வரை நீண்டு செல்வதுடன், மாணவர்கள் ESU ல் தமது அபிலாஷைகள் மற்றும் தொழில் இலக்குகளுக்கு ஏற்ற சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்கின்றது. 

Kingston University London மற்றும் London Metropolitan University ஆகியவற்றுடனான அதன் கூட்டு மூலமாக பிரசித்தி பெற்ற, சர்வதேசரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகைமைகள், கூட்டு ஆராய்ச்சிக்கான வாய்ப்புக்கள், மற்றும் பல்வகைப்பட்ட கற்கைநெறி வழிகளை ESU Kandy தனது மாணவர்களுக்கு வழங்குகின்றது. 

இரட்டைப் பட்டப்படிப்பு தெரிவுகள், சர்வதேச 2+1 மற்றும் 2+2 மாற்றங்கள், சர்வதேச கற்கைபீட ஈடுபாடு, எல்லைகளை விரிவுடுத்தும் உலகத்தரம் வாய்ந்த கல்வி ஆகிய நன்மைகளும் மாணவர்களுக்கு கிடைக்கின்றது.   

இது குறித்து கருத்து தெரிவித்த  ESOFT Metro Campus மற்றும் ESU ஆகியவற்றின் தலைவர், மற்றும் குழும முகாமைத்துவப் பணிப்பாளரான வைத்தியர் தயான் ராஜபக்ச,   

“ESU Kandy ஆனது வெறுமனே ஒரு கல்வி நிறுவனம் என்பதற்கும் அப்பாற்பட்டது, இது எல்லையற்ற வாய்ப்புக்களுக்கும், சாத்தியங்களுக்கும் வழிவகுக்கின்றது.

25 ஆண்டுகளாக கல்வி மூலமாக மாணவர்களுக்கு வலுவூட்டியுள்ளதைத் தொடர்ந்து, இயல்பான அடுத்த படியாக ESU Kandy அமையப்பெற்றுள்ளதுடன், 2025 ஜுன் கற்கைநெறிக்காக மாணவர்களை உள்வாங்குவது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். 

தமது நகரத்தையோ அல்லது நாட்டையோ விட்டு வெளியேற வேண்டிய அவசியமின்றி, அதியுயர் தராதரம் கொண்ட கல்வியை முன்னெடுக்க விரும்புகின்ற இலங்கை இளைஞர்,யுவதிகளுக்கு கிடைக்கும் சாத்தியங்களுக்கு ESU மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது. 

வகுப்பறைக் கற்றல் நடவடிக்கைகளுக்கு அப்பால், இலங்கையில் சர்வதேச மட்டத்திலான குறிக்கோளுடன் உள்நாட்டில் கல்விகற்ற தொழில் வல்லுனர்களைக் கொண்ட சமூகமொன்றை வளர்ப்பதே ESU ன் இறுதி நோக்கம்” என்றார். 

இதே உணர்வைப் பிரதிபலித்த ESU துணைவேந்தர் பேராசிரியர் விரஞ்ச கருணாரட்ன,

“கடுமையான கல்விக் கோட்பாடு மற்றும் நடைமுறைத் திறன்கள் ஆகியவற்றை எமது கற்கைநெறிகள் ஒன்றிணைப்பதுடன், அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்களின் துணையுடன் மிக வேகமாக பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற சர்வதேச அரங்கின் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தயாரானவர்களான எமது பட்டதாரிகள் மாறுவதை நாம் உறுதி செய்கின்றோம்” என்றார்.

மேலும், ESU Kandy ன் பிரதி துணைவேந்தர் கலாநிதி ஹேஸல் மெசஞ்சர்  இது குறித்து கருத்து வெளியிடுகையில்,

“ESU ல் கல்வி என்பது கண்டுபிடிப்புக்கள் மற்றும் ஆளுமை அபிவிருத்தி ஆகியவற்றிற்கான பயணம். மாணவர்களை அறிவுபூர்வமாகவும், ஆளுமைரீதியாகவும் விருத்தி செய்து, சமுதாயத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்கும் வல்லமை படைத்தவர்களாக தயார்படுத்துவதில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

2025 ஜுன் உள்வாங்கலுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.  ESOFT பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவதன் மூலமாகவோ அல்லது அனுமதிகளை மேற்பார்வை செய்யும் அணியைத் தொடர்பு கொண்டோ மாணவர்களும், பெற்றோரும் ESU Kandy குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்