பாலஸ்தீனம் குறித்த ஐக்கியநாடுகளின் சர்வதேசமாநாட்டில் கலந்துகொண்டால் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்கா அதன் சகாக்களை எச்சரித்துள்ளது.
பாலஸ்தீன விவகாரத்திற்கு இரு தேசதீர்வு குறித்து ஆராய்வதற்கான ஐக்கியநாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வது குறித்தே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஐக்கியநாடுகளின் மாநாட்டை தொடர்ந்து இஸ்ரேலிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடும் நாடுகளை அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை மற்றும் நலன்களிற்கு எதிராக செயற்படும் நாடுகளாக கருதப்போவதாக இராஜதந்திர அறிக்கையில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.இந்த நாடுகள் இராஜதந்திர விளைவுகளை எதிர்கொள்ளநேரிடும் எனவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
காசாவில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும் உயிர்காக்கும் முயற்சிகளிற்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என நாங்கள் கருதும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவேண்டாம் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இஸ்ரேலை தண்டிக்கும் விதத்திலான தடைகள் அரசியல் நடவடிக்கைகள் போன்றவைகளிற்கு சர்வதேச மாநாட்டில் ஆதரவு வழங்கப்படலாம் இதனை எதிர்க்கின்றோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதிசெய்யும் அதேவேளை பாலஸ்தீன தேசத்திற்கான திட்டத்தினை முன்வைக்கும் மாநாட்டினை பிரான்சும் சவுதிஅரேபியாவும் அடுத்தவாரம் நியுயோர்க்கில் நடத்துகின்றன.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM