வரலாற்று முக்கியத்துவமிக்க திஸ்ஸமஹாராம ரஜமகா விஹாரையின் ரந்தோலி பெரஹர வீதி உலா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட அதிதிகளின் பங்குபற்றுதலுடன் செவ்வாய்க்கிழமை (10) இரவு ஆரம்பமானது.
புனித தந்தம் அடங்கிய பேழை பிரதிஷ்டை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, திஸ்ஸமஹாராம விஹாரையின் 125வது பெரஹர வீதி உலா ஆரம்பமானதுடன், இந்த ஆண்டு பெரஹரவை மலை நாட்டின் கண்டிய நடனங்கள், தெற்கு நடனங்கள் மற்றும் சபரகமுவ நடனங்கள் உட்பட பல்வேறு சுதேச நடன மரபுகளால் அலங்கரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதி ரந்தோலி பெரஹர ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
திஸ்ஸமஹாராம விகாரையின் பிரதம விகாராதிபதியான தேவாலேகம தம்மசேன தேரர், அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக பௌத்த சாசனத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு தேரர் ஆவார்.
மேலும் சுனாமி பேரழிவின் போது மக்களுக்கு சிறந்த சேவையைச் செய்த தேரர் , நேர்மையான நோக்கங்களுடன் சமூக சேவையில் ஈடுபடுபவர்கள் மிகக் குறைவான இக்காலத்தில் சங்கைக்குரிய தம்மசேன தேரரின் இந்த நேர்மையான அர்ப்பணிப்பைப் பாராட்ட வேண்டும்.
1990 களில் இருந்து திஸ்ஸமஹாராம விஹாரையுடன் எனக்கு தொடர்புகள் உள்ளது. எனவே, இந்த விகாரையைப் பற்றி நான் நன்கு அறிவேன்.
எமது நாட்டில் அரசியல் மாற்றத்தை மட்டுமல்ல, சமூக மாற்றத்தையும் கொண்டு வருவது அவசியம். கல்வியிலும் அந்த மாற்றம் அவசியம். அந்தத் தேவையை முன்கூட்டியே புரிந்துகொண்ட சங்கைக்குரிய தேரர், நாட்டின் மாற்றத்திற்காக எங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என நாம் நம்புகிறோம்.
பெரஹர என்பது ஒரு கலாசார விழா. ஒற்றுமை உணர்வையே பெரஹர முழுவதும் வெளிப்படுத்துகிறது, அந்த வகையில், அந்த ஒற்றுமையைப் பாதுகாக்க இது போன்ற கலாசார அம்சங்கள் மிகவும் முக்கியமாக அமைகின்றது என்றார்.
அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சங்கைக்குரிய தேவாலேகம தம்மசேன தேரர் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது மரியாதையையும் நன்றியையும் தெரிவித்தார்.
கதிர்காமம் கிரிவிகாரையின் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய கொபவக தம்மிந்த நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர், தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிச்சந்திர, பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி மற்றும் அதுல வேரகொட, அரச அதிகாரிகள், தூதுவர்கள் உட்பட ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM