மத்துகம, அம்பருல்லகஹவத்த பகுதியில் தந்தை மற்றும் மகன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதன்கிழமை (11) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மகன் உயிரிழந்துள்ளதுடன் தந்தை காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தந்தையும் மகனும் பலத்த காயமடைந்த நிலையில், களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மகன் உயிரிழந்துள்ளார்.
யட்டதொல, நவுத்தொடுவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகன் உயிரிழந்துள்ளதுடன் 51 வயதுடைய தந்தை காயமடைந்துள்ளார்.
சம்பவத்திற்குப் பின்னர் தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரைக் கைதுசெய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM