(நெவில் அன்தனி)
உலகின் முன்னணி டி20 துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான நிக்கலஸ் பூரன், தனது 29ஆவது வயதில் மேற்கிந்திய தீவுகளுக்கான சர்வதேசப் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வுபெற்றுள்ளார்.
எதிர்காலத்தில் அவரது கவனம் எல்லாம் இலாபமீட்டும் தொழில்முறை கிரிக்கெட்டில் இருக்கப்போகிறது.
ட்ரினிடாடைச் சேர்ந்த பூரன் மேற்கிந்திய தீவுகளுக்காக 61 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 1983 ஓட்டங்களையும் 106 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 2275 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இண்டியன் பிரீமியர் லீக் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் அணிக்காக விளையாடிய பூரன், ஒய்வு பெறுவதற்காக இங்கிலாந்துக்கு எதிரான சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடாமல் இருக்க தீர்மானித்தார்.
அடுத்துவரும் கோடை பருவத்தில் மேஜர் லீக் கிரிக்கெட் (MLC) மற்றும் தி ஹண்ட்ரட் ஆகியவற்றிலும் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளார்.
இந் நிலையில் MI நியூயோர்க் அணியின் தலைவராக பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பூரன் ஓய்வுபெற்றதை அடுத்து 'அவரது சாதனைகளை நாங்கள் மதித்து தலை வணங்குகிறோம். மேலும் அவர் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் ரசிகர்களுக்கு வழங்கிய நினைவில் நிற்கக்கூடிய தருணங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்' என கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தெரிவித்துள்ளது.
'அவரது பயணத்தின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அவருக்கு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனவும் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM