(நெவில் அன்தனி)
நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுக்கும் முதல் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் முதல் நாளன்று 255 ஓட்டங்களுக்கு 14 விக்கெட்கள் சரிந்தன.
அவுஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் 212 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய தென் ஆபிரிக்கா முதலாம் நாளான செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கெகிசோ ரபாடா அற்புதமாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்ததுடன் மார்க்கோ ஜென்சன் 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அவர்களைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் 4 விக்கெட்களைக் கைப்பற்றி போட்டியில் சமநிலையை ஏற்படுத்தினர்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 212 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
ஸ்டீவன் ஸ்மித் 66 ஓட்டங்களையும் போ வெப்ஸ்டர் 72 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 79 ஓட்டங்களும் போ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 46 ஓட்டங்களும் அவுஸ்திரேலியாவை கௌரவமான நிலையில் இட்டன. கேரி 23 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 51 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் மார்க்கோ ஜென்சன் 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்களை இழந்து 43 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
ரெயான் ரிக்ல்டன் (16), ஏய்டன் மார்க்ராம் (0), வியான் முல்டர் (6), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் (2) ஆகிய நால்வரே ஆட்டம் இழந்தவர்களாவர்.
அணித் தலைவர் டெம்பா பவுமா 3 ஓட்டங்களுடனும் டேவிட் பெடிங்ஹாம் 8 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.
பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM