(நெவில் அன்தனி)
கொழும்பு சினமன் லைவ் ஹோட்டலில் பிரமாண்டமான முறையில் கடந்த திங்கட்கிழமை இரவு நடத்தப்பட்ட ஹோம் லேண்ட்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில், சந்த்ரா ஷாவ்டர் உட்பட ஆறு பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
பல்லாண்டு காலமாக கிரிக்கெட் விளையாட்டின் வளர்ச்சிக்கு வீரர்களாகவும் நிருவாகிகளாகவும் முகாமையாளர்களாவும் அரும்பணியாற்றிய நால்வருக்கும் சுமார் ஒரு தசாப்தத்துக்கு மேலாக கிரிக்கெட் செய்திகளைத் திரட்டி வெளியிட்டுவரும் பத்திரிகையாளர் இருவருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த விருது விழாவில் சர்வதேச அரங்கில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளுக்கும் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
சர்வதேச போட்டிகளில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளின் விபரங்கள் ஏற்கனவே வீரகேசரி ஒன்லைனில் வெளியிடப்பட்ட நிலையில் வாழ்நாள் சாதனையாளர்கள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சாதித்தவர்கள் தொடர்பான விபரங்கள் இங்கு தரப்படுகிறது.
சந்த்ரா ஷாவ்டர்
கல்கிஸ்ஸை சென். தோமஸ் கல்லூரி, தமிழ் யூனியன் மற்றும் இலங்கை (சிலோன்) ஆகியவற்றின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் இலங்கையின் முன்னாள் ஹொக்கி வீரருமான 95 வயதான சந்த்ரா ஷாவ்டருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது மிகவும் பொருத்தமாகும்.
இவர் இலங்கை அணிகளின் முகாமையாளராகவும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் (தற்போது ஸ்ரீலங்கா கிரிக்கெட்) நிருவாகிகளில் ஒருவராகவும் பணியாற்றி இருந்தார். அத்துடன் இலங்கையில் முதலாவது தனியார் காப்புறுதி நிறுவனமான ஜனசக்தி நிறுவனத்தின் ஸ்தாபக அதிபரும் ஆவார்.
இலங்கையின் மிகவும் பழைமை வாய்ந்த விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான தமிழ் யூனியன் கிரிக்கெட் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப்பின் போஷகர்களில் ஒருவராகவும் சந்த்ரா ஷாவ்டர செயல்படுகிறார்.
ஸ்டான்லி ஜயசிங்க
பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஸ்டான்லி ஜயசிங்க, நாலந்த கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரராவார்.
அவரது இளமை காலத்தில் சிலோன் அணிக்காக விளையாடிய ஸ்டான்லி ஜயசிங்க, பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு லெஸ்டர்ஷயர் பிராந்திய அணிக்காக மிகத் திறமையாக விளையாடி இருந்தார்.
இலங்கை அணியின் முகாமையாளராக ஒரிரு தடவைகள் பணியாற்றியதுடன் பல சிறந்த வீரர்களை உருவாக்கிய பெருமையும் அவருக்கு இருக்கிறது.
அவரது 94ஆவது வயதில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வழங்கி கௌரவித்துள்ளது.
ரஞ்சித் பெர்னாண்டோ
ஐசிசியில் இலங்கைக்கு பூரண அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் 1975ஆம் நடைபெற்ற அங்குரார்ப்பண உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விக்கெட் காப்பாளராக விளையாடிய ரஞ்சித் பெர்னாண்டோவும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட ரஞ்சித் பெர்னாண்டோ, கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரியின் பழைய மாணவரும் கிரிக்கெட் வீரருமாவார். 1960களில் பாடசாலை கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்திய ரஞ்சித் பெர்னாண்டோ பின்னர் என்.சி.சி. கழகத்தில் இணைந்து பல வருடங்கள் விளையாடி வந்தார். இலங்கைக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்த பின்னர் முதாலவது பயிற்றநராக ரஞ்சித் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டார். கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு மட்டங்களில் அவர் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
ஜானக்க பத்திரண
கண்டி சில்வெஸ்டர் கல்லூரி மற்றும் கண்டி இளையோர் கிரிக்கெட் கழகம் ஆகியவற்றின் முன்னாள் வீரரான ஜானக்க பத்திரண, கிரிக்கெட்டின் நிருவாகத் துறையில் ஆற்றிய சேவைக்காக அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அஸ்கிரிய சர்வதேச விளையாட்டரங்கு, பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கு ஆகியவற்றின் முகாமையாளராகவும் கடமையாற்றியவராவார்.
ஊடகவியலாளர்கள் இருவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
கிரிக்கெட் விளையாட்டு தொடர்பான செய்திகளை கடந்த ஒரு தசாப்தத்துக்கு மேல் வெளியிட்டு வரும் பத்திரியாளர்களான பிறின்ஸ் குணசேகர (தினமின), ப்ரசன்ன சஞ்சீவ தென்னக்கோன் (ஞாயிறு லங்காதீப) ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
உள்ளூர் கிரிக்கெட்டில் பிரகாசித்த வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசத்திய வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டதுபோன்று உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரகாசித்த வீர, வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
ஆடவர் பிரிவில் முதல் தர கழகங்களுக்கு இடையிலான 3 நாள் கிரிக்கெட், 50 ஓவர் கிரிக்கெட், ரி20 கிரிக்கெட் ஆகிய போடடிகளிலும் பிரகாசித்த வீரர்களுக்கும் அழைப்பு மகளிர் ரி20 கிரிக்கெட், மகளிர் 50 ஓவர் கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் பிரகாசித்த வீராங்கனைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.
பிரதான கழக ஆடவர் ரி20
சிறந்த துடுப்பாட்ட வீரர்: பவன்த வீரசிங்க (ஏஸ் கெப்பிட்டல்)
சிறந்த பந்துவீச்சாளர்: அக்கில தனஞ்சய (கோல்ட்ஸ்)
தொடர்நாயகன்: சாமிக்க கருணாரட்ன (என்சிசி)
பிரதான கழக ஆடவர் 50 ஓவர்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: டில்ஷான் முனவீர (நிகம்போ சிசி)
சிறந்த பந்துவீச்சாளர்: கிரிஷான் சஞ்சுல (எஸ்எஸ்சி)
தொடர்நாயகன்: தானுக்க தாபரே (ஏஸ் கெப்பிட்டல்)
பிரதான கழக ஆடவர் 3 நாள் கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: சஹான் கோசல (கண்டி கஸ்டம்ஸ் சிசி)
சிறந்த பந்துவீச்சாளர்: டிலும் சுதீர (பொலிஸ்)
தொடர்நாயகன்: ரவிந்து பெர்னாண்டோ (புளூம்பீல்ட்)
பிரதான கழக மகளிர் அழைப்பு கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்டக்காரர்: ஹர்ஷிதா சமரவிக்ரம (கோல்ட்ஸ்)
சிறந்த பந்துவீச்சாளர்: ரஷ்மி சில்வா (கடற்படை)
தொடர்நாயகி: நிலக்ஷி டி சில்வா (கோல்ட்ஸ்)
மத்தியஸ்தர்கள் விருது (உள்ளூர் போட்டிகள்)
சிறந்த கள மத்தியஸ்தர்: சாமர டி சொய்ஸா
சிறந்த தீர்ப்பாளர்: பிரதீப் ஜெயப்பிரகாஷ்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM