(நெவில் அன்தனி)
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் (ICC Hall of Fame) இந்தியாவின் முன்னாள் அணித் தலைவர் எம்.எஸ். தோனி உட்பட புதிதாக எழுவர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
லண்டனில் உள்ள அபே ரோட் அரங்கில் திங்கட்கிழமை (09) நடைபெற்ற பிரமாண்டமான நிகழ்வின்போது இந்த ஏழு பேரும் இப் பட்டியலில் உத்தியோகபூர்வமாக இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இந்த ஏழு பேரில் இருவர் தென் ஆபிரிக்காவை சேர்ந்தவர்கள். அத்துடன் இரண்டு முன்னாள் வீராங்கனைகளும் அடங்குகின்றனர்.
அவுஸ்திரேலியாவின் மெத்யூ ஹேடன், தென் ஆபிரிக்காவின் ஹஷிம் அம்லா, இந்தியாவின் மஹேந்த்ர சிங் தோனி, தென் ஆபிரிக்காவின் க்றேம் ஸ்மித், நியூஸிலாந்தின் டெனியல் வெட்டோரி, பாகிஸ்தானின் சானா மிர், இங்கிலாந்தின் சாரா டெய்லர் ஆகிய ஏழு பேரே புகழ்பூத்த வீரர்கள் பட்டியலுக்குள் ஈர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த ஏழு புதிய உறுப்பினர்களையும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா வைபவரீதியாக வரவேற்றார்.
புகழ்பூத்த வீரர்கள்
மெத்யூ ஹேடன் (அவுஸ்ரேலியா)
103 டெஸட்கள், 8625 ஓட்டங்கள், சராசரி 50.73
161 சர்வதேச ஒருநாள் போட்டிகள், 6133 ஓட்டங்கள், சராசரி 43.80
9 சர்வதேச ரி20 போட்டிகள், 308 ஓட்டங்கள், சராசரி 51.33
1 photo mathew hayden
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் உலகம் முழுவதும் உள்ள மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களை சிதறடித்த அதிரடி ஆட்டக்காரரான மெத்யூ ஹேடன், ஐசிசியின் புகழ்பூத்த வீரர்களுக்கான பிரத்தியேக பட்டியலில் இணைகிறார்.
30 டெஸ்ட் சதங்களைக் குவித்துள்ள மெத்யூ ஹேடன், ஐந்து நாள் கிரிக்கெட் போட்டிகளில் ஓர் அதிசிறந்த ஆரம்பத் துடுப்பாட்ட வீரராவார்.
50 ஓவர் கிரிக்கெட் வடிவத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்ட மெத்யூ ஹேடன், 2007 உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் அத்தியாத்தில் 3 சதங்களைக் குவித்ததுடன் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரானார்.
2003இலும் 2007இலும் உலக சம்பியனான அவுஸ்திரேலிய அணிகளில் மெத்யூ ஹேடன் இடம்பெற்றார். தற்போது அவர் நேர்முக வர்ணனையாளராக செயற்படுகிறார்.
ஹஷிம் அம்லா (தென் ஆபிரிக்கா)
124 டெஸ்ட்கள், 9282 ஓட்டங்கள், சராசரி 46.64
181 ஒருநாள் போட்டிகள், 8113 ஓட்டங்கள், சராசரி 49.46
44 ரி20 போட்டிகள், 1277 ஓட்டங்கள், சராசரி 33.60
நிதானமும் பொறுமையும் கொண்ட ஒரு சிறந்த முன்வரிசை வீரர் ஹஷிம் அம்லா ஆவார். தென் ஆபிரிக்காவின் நிலையான மற்றும் உறுதியான வீரராகத் திகழ்ந்த அம்லா, ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைவதற்கு மிகவும் பொறுத்தமானவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆம்லாவின் ஒட்டுமொத்த சாதனை மிகச் சிறந்ததாக இருந்தது. மேலும் 50 ஓவர் வடிவத்தில் இன்னும் சிறப்பாக இருந்தது. எத்தகைய சூழ்நிலைகளிலும் ஓட்டங்களை மிக இலகுவாக குவித்து அனைவரையும் பிரமிக்கவைத்தவர்.
வலதுகை துடுப்பாட்ட வீரரான அம்லா, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3000, 5000, 7000 ஓட்டங்களை மிகவேகமாக பூர்த்திசெய்தவர் என்ற சாதனைக்கு உரித்தானவர்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 28 சதங்களையும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 27 சதங்களையும் குவித்து தனது ஆற்றல் எத்தகையது என்பதை நிரூபித்திருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிராக 2012ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 311 ஓட்டங்களைக் குவித்ததன் மூலம் தென் ஆபிரிக்கா சார்பாக முச்சதம் குவித்த முதலாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
90 டெஸ்ட்கள், 4876 ஓட்டங்கள், சராசரி 38.08, 256 பிடிகள், 38 ஸ்டம்ப்கள்
350 ஒருநாள் போட்டிகள், 10775 ஓட்டங்கள், சராசரி 50.57, 321 பிடிகள், 123 ஸ்டம்ப்கள்
91 ரி20 போட்டிகள், 1617 ஓட்டங்கள், சராசரி 37.60, 57 பிடிகள், 54 ஸ்டம்ப்கள்
எம்.எஸ். தோனி தனது நீண்டகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் பல சிறப்பம்சங்களை உருவாக்கியுள்ளார்.
அத்துடன் ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களில் மிகவும் பிரபல்யம் பெற்ற வீரர் தோனி ஆவார்.
2011இல் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஐசிசி ஆடவர் உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவுக்காக வெற்றி ஓட்டங்களை அடித்தபோது, தனது முத்திரை ஹெலிகாப்டர் அடிகளில் ஒன்றை அவர் உருவாக்கியது அவரது வாழக்கையில் மறக்கமுடியாத தருணம் ஆகும்.
மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் மிகச் சிறந்த, துடிப்பான விக்கெட் காப்பாளாராக அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அதேவேளை, கடைசி ஓவர்களில் வெற்றி இலக்கை விரட்டிக் கடக்கும் ஆற்றல் அவரிடம் குடிகொண்டிருந்ததால் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அவர் பிரபல்யம் பெற்றார். இரசிகர்களாலும் பெரிதும் கவரப்பட்டார்.
2007இல் நடைபெற்ற அங்குரார்ப்பண ஐசிசி ரி20 உலகக் கிண்ணம், 2011 உலகக் கிண்ணம், 2013 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் ஆகிய மூன்று கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவுக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த அற்புதமான அணித் தலைவர் தோனி ஆவார். இந்த மூன்று கிண்ணங்களை வென்றெடுத்த ஒரே ஒரு அணித் தலைவர் என்ற சாதனையை தோனி தன்னகத்தே இப்போதும் கொண்டுள்ளார்.
க்றேம் ஸ்மித் (தென் ஆபிரிக்கா)
117 டெஸ்ட் போட்டிகள், 9265 ஓட்டங்கள், சராசரி 48.25
197 ஒருநாள் போட்டிகள், 6989 ஓட்டங்கள், சராசரி 37.98, 18 விக்கெட்கள்.
33 ரி20 போட்டிகள், 982 ஓட்டங்கள், சராசரி 31.67
மிகச் சிறந்த ஆரம்ப வீரராகவும் எவ்வித கேள்விக்கும் இடமின்றி ஒரு சிறந்த அணித் தலைவராகவும் அனைவராலும் போற்றப்பட்டவர் க்றேம் ஸ்மித்.
கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு கடுமையான மற்றும் ஈடினையற்ற ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் உயர்ந்து நின்றார். இளம் வயதில் தென் ஆபிரிக்காவின் அணித் தலைவராக வரவேண்டும் என்ற அவரது கனவு வீண்போகவில்லை.
புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றதில் மிகுந்த பெருமை அடைவதாக ஸ்மித் கூறினார்.
டெனியல் வெட்டோரி (நியூஸிலாந்து)
113 டெஸ்ட் போட்டிகள், 4531 ஓட்டங்கள், சராசரி 30.00, 362 விக்கெட்கள்
295 ஒருநாள் போட்டிகள், 2253 ஓட்டங்கள், சராசரி 17.33, 305 விக்கெட்கள்
34 டி20 போட்டிகள் - 12.81 சராசரியுடன் 205 ரன்கள், 38 விக்கெட்கள்
ஒரு சிறந்த இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் மத்திய மற்றும் பின்வரிசையில் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரராகவும் டெனியல் வெட்டோரி பிரகாசித்தார்.
ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்படதன் மூலம் பெருமை அடைவதாக அவர் கூறினார்.
வெட்டோரி ஒரு சிறந்த சகலதுறை வீரராக தனது கிரிக்கெட் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4,000 ஓட்டங்களைக் குவித்து 300 விக்கெட்களை வீழ்த்திய மூன்று வீரர்களில் ஒருவராக வெட்டோரி திகழ்கிறார்.
அவர் 'பிளக் கேப்ஸ்' அணிக்கு ஒரு சிறந்த தலைவராகவும் இருந்தார். ஸ்டீவன் ப்ளெமிங் தலைவர் பதவியிலிருந்து விலகிய பின்னர் நியூஸிலாந்து அணியின் தலைவர் பதவியை வெட்டோரி பொறுப்பேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் கிண்ண இறுதிப் போட்டிக்கு நியூஸிலாந்து அணியை வழிநடத்தி இருந்தார்.
தற்போது ஆஸ்திரேலிய அணியின் உதவிப் பயிற்றுநராக வெட்டோரி செயற்படுகிறார்.
சானா மிர் (பாகிஸ்தான்)
120 ஒருநாள் போட்டிகள், 1630 ஓட்டங்கள், சராசரி 17.91, 151 விக்கெட்கள்
106 ரி20 போட்டிகள், 802 ஓட்டங்கள், சராசரி 14.07, 89 விக்கெட்கள்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகத் திறமையான ஆற்றல்களை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் இணைக்கப்பட்ட முதலாவது பாகிஸ்தான் வீராங்கைனை என்ற பெருமையை சானா மிர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட விக்கெட்களை வீழ்த்தியுள்ள மிர், மைதானத்திலும், மைதானத்திற்கு வெளியேயும் தனது சிறந்த சமூகப் பணிக்காகப் பெயர் பெற்றவர்.
சாரா டெய்லர் (இங்கிலாந்து)
10 டெஸ்ட் போட்டிகள், 300 ஓட்டங்கள், சராசரி 18.75, 18 பிடிகள், 2 ஸ்டம்ப்கள்,
126 ஒருநாள் போட்டிகள், 4056 ஓட்டங்கள், சராசரி 38.26, 87 பிடிகள், 51 ஸ்டம்ப்கள்
90 டி20 போட்டிகள், 2177 ஓட்டங்கள், சராசரி 29.02, 23 பிடிகள், 51 ஸ்டம்ப்கள்
அண்மைய காலங்களில் மிகவும் திறமையான வீராங்கனைகளில் ஒருவரான சாரா டெய்லர், இங்கிலாந்தின் நட்சத்திர வீக்கெட்காப்பாளரும் துடுப்பாட்ட வீராங்கனையுமாவார்.
14 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடர்ந்து ஐசிசியின் புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் சாரா டெய்லர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
மின்னல் வேக விக்கெட் காப்பாளர் என்ற பெயர் பெற்றவர். விக்கெட் காப்பாளராக அவர் மொத்தமாக 103 ஸ்டம்ப்களை செய்துள்ளார்.
அத்துடன் அவர் ஒரு திறமையான முன்வரிசை துடுப்பாட்ட வீராங்கனையும் ஆவார்.
ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தையும் ஐசிசி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தையும் 2009இல் இங்கிலாந்து சுவீகரித்தபோது அவ் வெற்றிகளில் சாரா டெய்லர் பெரும் பங்காற்றியிருந்தார்.
எட்டு வருடங்கள் கழித்து 2017இல் நடைபெற்ற உலக்க கிண்ணத் தொடரில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான அரை இறுதி போட்டியில் அதிக ஓட்டங்களைக் குவித்த சாரா டெய்லர், இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக 45 ஓட்டங்களைப் பெற்று தனது சொந்த நாட்டில் இங்கிலாந்து சம்பியனாவதை உறுதிசெய்திருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM