bestweb

காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள்.அவளுக்கு மூளை இல்லைஎண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.-டாக்டர் எஸ்ஸிடீன் ஷேஹாப்

Published By: Rajeeban

11 Jun, 2025 | 04:43 PM
image

வடக்கு காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள், ஆனால் இந்த உலகம் அவளை ஏற்கவில்லை. அவளுக்கு மூளை இல்லை. அவள் அப்பாவித்தனமானவள்  என்;ற அர்த்தத்திலோ அல்லது கவிதையாகவோ நான் இதனை தெரிவிக்கவில்லை.- உடற்கூறியல் ரீதியாக இதனை தெரிவிக்கின்றேன்.

அனென்செபலி. மூளைப்பகுதி இல்லாத பிறவி. எண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.

அவள் முழுமையாக கருவுற்று பிறந்தாள். அவளது தாய் ஒன்பது மாதங்கள் அவளை சுமந்தாள்—தீக்காய்ந்த இரவுகள் அழும் காலைகள் தூசிஇ துக்கம்இ மற்றும் சைரன்களின் இடையேஅவளை சுமந்தாள். பிறந்தாள் ஆனால் காப்பாற்றுவதற்கு உயிர் இல்லை. மௌனமே மிச்சம்.மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக காணப்பட்டார்கள்.  தங்கள் கைகளின் எல்லைகள் அவர்களை ஏமாற்றியது.

நான் மிகவும் திறமையான மருத்துவநிபுணர்களின் சுத்தமான விரல்கள் நடுங்கியதை பார்த்தேன்.. குழப்பத்தால் அல்ல உணர்வால். 

ஊனமுற்ற வளர்ச்சி. பிறவியியல் தோல்வி. இதுவும் ஒரு விபத்தால் இல்லை போர் காரணமாக. 

குண்டுகள் கட்டிடங்களை மட்டுமல்லமரபணுக்களையும் தாக்கின. 

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட  கம்பீரமாக இருக்கும் ஆயுதங்கள் இப்போது கருப்பையையும் நச்சாக்கின. நாளை என்ற எண்ணத்தையே விஷமாக்கின.

இந்த பயங்கரத்தை நாம் என்னென்று அழைப்பது? கதிரியக்கத்தன்மை? டயாக்ஸின்கள்? டீபிளீட்டட் யூரேனியம்? உடனடியாக கொல்லாத அதீத நச்சுகள். அவை காத்திருக்கும். கருவூட்டம் வழியே நுழைந்து நரம்பு குழாய்களை முறுக்கிவிடும். .வாழ்க்கை ஆரம்பமாகும் முன்னரே அவற்றை அழித்தன.

இது ஒரே நிகழ்வு அல்ல. கடுமையான கருசேதங்கள் .முன்கூட்டிய பிறப்புகள்இ ஊனமுற்ற உறுப்புகள்இ மிக பெரிய உதடுபிளவுகள். உடைந்த சுருள்கள் போல முதுகுதண்டுகள்.

மருத்துவர்கள் தங்கள் மத்தியில் பேசிக்கொள்கின்றார்கள் இது ஒரு முறையாகிவிட்டது என.

லான்செட்  ஆய்வு   200000 பேர் வரை நேரடி குண்டுவீச்சால் அல்ல மரபணு பாதிப்பிலிருந்து பிறக்காத தலைமுறைகளுக்கு பரவுகிறது

ஆனால் உலகம் செவிடாக உள்ளது அது இறந்தவர்களை வெடிப்புகள் மூலம் எண்ணுகின்றது.அங்கவீனத்தினால் அல்ல அது இழந்த அவயங்கள் மூலம் இழப்பை எண்ணுகின்றது.அழிக்கப்பட்ட மரபணுக்கள் மூலமாகயில்லை.

இங்கே சிதைந்த கட்டிடங்களுக்குள் ஆழமான காயம் கருப்பையில் உள்ளது. நேற்றுத்தான் அவளைக் கண்டேன்—தாயை. 

அழவில்லை.  பார்த்தாள். காலியாகிய கைகள். மூளை இல்லாத மகளைக் கருவில் சுமந்தவள். ஆனால் அந்தக் குழந்தைக்கு கண் இமைகள் இருந்தன. விரல்கள் இருந்தன. அதுவே மிகவும் கொடுமையான உண்மை—

இன்னும் எங்கேயோ மற்றொரு குழந்தை பிறக்கலாம்—தாயின் மூச்சிலுள்ள நச்சின் சுவடுடன். ஏன் எனத் தெரியாமல்.

போர் முடிவடையும் என்கிறார்கள். அமைதி ஏற்படும் என்கிறார்கள். குணமடையும் என்கிறார்கள். ஆனால் அது செல்களில் வாழ்ந்தால் எப்படி முடியும்? கருப்பை போர்க்களமாக மாறினால் எப்படி? உயிரியல் போரின் ஆவணமாக மாறினால் எப்படி?

இது வெறும் தூசிகள் மற்றும் இரும்புகளின் போர் அல்ல. இது உயிருக்கு எதிரான போர். பெண்களுக்கு எதிரான போர். பிறப்பின் செயலை எதிர்க்கும் போர்.

நான் பல உயிரிழப்புகளை பார்த்திருக்கிறேன். உடைந்த பசியோடு மூச்சு எடுக்கும் உடல்களை. ஆனால் ஒருத்தி—முதியொரு தாய்—மூளை இல்லாத குழந்தையைக் கொண்டுவந்தபோது எழுந்த மௌனம் போல ஒரு மௌனத்தைக் கேள்வியுற்றதில்லை.

ஆகவே நான் எழுதுகிறேன். குற்றம் சாட்ட அல்ல. அழத்தான் அல்ல. நினைவுகூர.

ஏனெனில் சில ஆயுதங்கள் வெடிக்காது. அவை உருவாக்குகின்றன.

வைத்தியர் எஸ்ஸிடீன் ஷேஹாப்
பாலஸ்தீனிய மருத்துவர், காசா

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழரசு கட்சி எதிர்நோக்கும் புறச்சவால்களும் அகச்சவால்களும் 

2025-07-08 18:52:04
news-image

எங்கள் கணவர்கள் பிள்ளைகளிற்கு என்ன நடந்தது...

2025-07-08 15:56:00
news-image

இலங்கையில் இணைய குற்ற வலையமைப்புகளின் அச்சமூட்டும்...

2025-07-07 15:49:57
news-image

' அவைகள் தோல்களும் எலும்புகளும்"காசாவில் பால்மா...

2025-07-07 12:16:34
news-image

மக்கள் தொடர்பு அறுந்த அரசியல்வாதிகளின் விதி

2025-07-06 16:59:37
news-image

உலக முஸ்லிம்களின் கண்ணியத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ள...

2025-07-06 16:58:36
news-image

தலாய் லாமா: அரசியல் சூறாவளிக்குள் ஓர்...

2025-07-06 16:35:41
news-image

சேர்பியாவில் தொடரும் வெகுஜனப் போராட்டங்கள்

2025-07-06 16:32:35
news-image

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அர்த்தமுள்ள கொள்கைகள்...

2025-07-06 16:27:50
news-image

சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நோர்வூட் பிரதேச சபை...

2025-07-06 15:52:51
news-image

இலங்கையும், 'றோ'வின் புதிய தலைவரும்

2025-07-06 15:47:26
news-image

அடக்கி வாசிக்கும் எதிரணி அரசியல் தலைவர்கள்

2025-07-06 15:44:24