இலங்கைக்கான ஜப்பானிய துணைத் தூதுவர் - வஜிர அபேவர்தன இடையில் சந்திப்பு

11 Jun, 2025 | 04:04 PM
image

இலங்கைக்கான ஜப்பானிய துணைத் தூதுவர் நவோகி கமோஷிடா (Naoki Kamoshida) மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன ஆகியோருக்கு இடையில் இன்று புதன்கிழமை (11) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பு கொழும்பு பிளவர்  வீதியில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

இந்த சந்திப்பின் போது இலங்கையின் அரசியல், பொருளாதார நிலைமை, ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் சார்ந்த செயற்பாடுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்