bestweb

Kedella Construction Expo 2025 உடனான தனது 13ஆவது இணைவை செலான் வங்கி நிறைவு செய்கிறது

11 Jun, 2025 | 12:09 PM
image

2025ஆம் ஆண்டில் Kedella Construction Expoஇன் Title மற்றும் உத்தியோகபூர்வ வங்கிப் பங்காளராக செலான் வங்கி தொடர்ந்து 13ஆவது ஆண்டாக அதன் பங்களிப்பைத் தொடர்ந்தது.

Asia Exhibition and Conventionsஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வின் அண்மைய கண்காட்சி, மார்ச் 28 முதல் 30 வரை சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மையத்தில் (BMICH) நடைபெற்றது. 

நாட்டின் முதன்மையான கட்டுமான மற்றும் கட்டிடக்கலை வர்த்தகக் கண்காட்சியின் 13வது ஆண்டைக் குறிக்கும் வகையில், செலான் வங்கி வீடமைப்புக் கடன்கள், தனிநபர் கடன்கள், லீசிங் வசதிகள், கடனட்டைகள், சேமிப்பு மற்றும் முதலீட்டு சேவைகள் உள்ளிட்ட வங்கியின் பரந்த சேவைகளை ஆராய ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கென காட்சிக்கூடம் ஒன்றைக் கொண்டிருந்தது.

கடன் விண்ணப்ப செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் வாடிக்கையாளர்களை மதிப்பீடு செய்து ஆலோசனை வழங்கும் திறன் கொண்ட செலான் வங்கியின் 'வீடமைப்புக் கடன் நிபுணர்கள்', செயன்முறை மற்றும் அதன் போட்டிமிக்க வட்டி வீதங்களை தெளிவுபடுத்துவதுடன் மட்டுமின்றி செயன்முறை தொடங்கிய வேளை தொடக்கம் அதன் ஒவ்வொரு படிநிலையிலும் வாடிக்கையாளர்களுக்கு அது தொடர்பான தகவல்களை தெரியப்படுத்தினர்.

செலான் வங்கி தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், அதிகரித்து வரும் மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பதற்கான ஒரு தீர்வாக நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளை நடைமுறைப்படுத்துவதற்கான செலான் சூரிய மின்சக்தி கடன்கள் (Seylan Solar Loans) தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. 

செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, " ஏனெனில் இது புதிய வீட்டு உரிமையாளர்களுக்கு அடிப்படையிலிருந்து உதவுவதிலும், ஏனைய வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீடுகளை புதுப்பிக்கவும் மேம்படுத்தவும் உதவுவதில் செலான் வங்கி மற்றும் Expo ஆகிய இரண்டினதும் பகிரப்பட்ட ஆர்வத்தை இந்நிகழ்வு பிரதிபலிக்கின்றது. இதன் நிமித்தம், இவ்வாண்டு இந் நிகழ்விலிருந்து நாங்கள் விடைபெறும் இவ்வேளையில், தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்க நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்.” என கருத்து தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்