SLT குழுமம், 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த முதல் காலாண்டு பகுதியில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 2,001 மில்லியனை பதிவு செய்துள்ளது. 2024 முதல் காலாண்டு பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 156 மில்லியனுடன் ஒப்பிடுகையில், இந்தப் பெறுமதி பெருமளவு உயர்வடைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், SLT குழுமம் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. குறிப்பாக, வருமானம் 3.4% இனால் உயர்ந்து ரூ. 27,851 மில்லியனாக பதிவாகியிருந்தது.
SLT PLC பெருமளவு செலவு குறைப்புகளையும் பதிவு செய்திருந்தது. தொழிற்பாட்டு செலவுகள் 5.2% இனால் குறைந்து ரூ. 838 மில்லியனாக பதிவாகியிருந்தது. குறிப்பாக, மின்சார செலவுகள் 2024 மார்ச் மற்றும் ஜுலை மாதங்களில் கட்டணக் குறைப்புகள் ஏற்படுத்தப்பட்டமையினால், 38.3% இனால் வீழ்ச்சியடைந்திருந்தன.
வாகன வாடகை மற்றும் எரிபொருள் செலவுகளும் 22.7% இனால் குறைந்திருந்தன. பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகளும் 12.5% இனால் குறைந்திருந்தது.
நாடு முழுவதும் சிறந்த வலையமைப்பு அனுபவங்களையும் பரந்த அளவிலான வலையமைப்பையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், SLT-MOBITEL மொபைல், 2024 ஆம் ஆண்டிற்கான நாட்டின் வேகமான 4G வலையமைப்பாக அங்கீகரிக்கப்பட்டது. இது மார்ச் 2025 இல் நடைபெற்ற மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் பார்சிலோனாவில் இணைய சோதனை மற்றும் பகுப்பாய்வில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Ookla® ஆல் அங்கீகரிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM