முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனிய, நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவரை ஜனாதிபதி பொது மன்னிப்பை பயன்படுத்தி சட்டவிரோதமாக விடுதலை செய்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (10) தெரிவித்துள்ளது.
டபிள்யூ. எச். அதுல திலகரத்ன என்பவர் நிதி மோசடி வழக்கின் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு கடந்த மே மாதம் 2ஆம் திகதி நீதிமன்றினால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 2024 டிசம்பர் மாதத்தில் 57 கைதிகளும், 2025 சுதந்திர தினத்தன்று 11 கைதிகளும் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் சட்டவிரோதமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது எனவும் சட்டமா அதிபர் திணைக்களம்,கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதுல திலகரத்ன விடுதலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஜூன் 9 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் துஷார உபுல்தெனியவை ஜூன் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM