உணவு ஒவ்வாமையினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் வடமராட்சி லட்சுமணன் தோட்டம் தும்பளைப் பகுதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் றோகினிதேவி யேந்தராசா என்ற 40 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இரவு பழங்கள் உட்கொண்டதாகவும் பின்னர் சோடா அருந்தியதாகவும் அதிகாலைவேளையில் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

பிரேத பரிசோதனையில் இதயத்தில் பலவீனம் இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில் உடல் பாகங்கள் சில பரிசோதனைக்கும் அனுப்பட்டுள்ளது.