ஜனாதிபதி ஜெர்மன் விஜயம் : பதில் அமைச்சர்கள் நியமனம்

Published By: Vishnu

10 Jun, 2025 | 10:22 PM
image

ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சராகவும், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராகவும், பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர பாதுகாப்பு பதில் அமைச்சராகவும், வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56
news-image

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு...

2025-06-15 23:25:35
news-image

எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரம்: பொதுமக்கள் அவதானத்துடன்...

2025-06-15 21:29:17