சிறைச்சாலை தலைமையகமே சட்டவிரோதமாக செயற்பட்டது ; கைதிகள் விடுப்பு தொடர்பில் ஜனாதிபதி அநுர தெரிவிப்பு

Published By: Digital Desk 2

10 Jun, 2025 | 06:44 PM
image

(இராஜதுரை ஹஷான்)

சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதுகாக்கின்றனர். சிறைச்சாலை தலைமையகம்  சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

அநுராதபுரம் - மிஹிந்தலை விகாரையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற தேசிய பொசன் உற்சவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றியதாவது,

சமூகம் மற்றும் சமூகம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிறுவனங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய பொலிஸ் சேவையில் ஒருசிலர் குற்றவாளிகளை பாதூக்கின்றனர். இதுவே உண்மை.

சட்டவிரோதமான வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்தை தடுப்பது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பிரதான பொறுப்பாகும். ஆனால் அந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாளக்குழுக்களின் தலைவர்களுக்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது. 

நிறுவனத்தின் பொறுப்பு மீறப்பட்டுள்ளது. சிறைக்கைதிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் பாதுகாப்பை வழங்குவது சிறைச்சாலை தலைமையகத்தின் பிரதான பொறுப்பாகும். 

ஆனால் அந்த திணைக்களம் சட்டவிரோதமான முறையில் கைதிகளை விடுவித்துள்ளது. மோட்டார் வாகனத்தின் செயற்பாடுகள் குறிப்பிடுவதற்கு ஒன்றுமில்லை. மக்களுக்கு சேவையாற்றும் அனைத்து நிறுவனங்களிலும் பிரச்சினைகள் காணப்படுகிறது.

வீழ்ச்சியடைந்துள்ள நிறுவன கட்டமைப்பை முதலில் மறுசீரமைக்க வேண்டும். சமூக கட்டமைப்பு முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. சமூகம் மற்றும் சமூக கட்டமைப்பிலான நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.

வரலாற்று  சிறப்புக்களை மாத்திரம் குறிப்பிட்டுக்கொண்டிருந்தால் சமூகம் என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. சமூக கட்டமைப்பில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்த கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். 

அவற்றை முறையாக அமுல்படுத்த வேண்டும். பழக்கத்தால் அடிமையான ஒருவிடயத்தை சட்டங்களால் மாத்திரம் மாற்றியமைக்க வேண்டும். செயற்பாடுகள் மற்றும் அடிப்படை விடயங்களில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆகவே சிறந்த மாற்றத்துக்கு அனைவரும் தயாராக வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56
news-image

மருந்து தட்டுப்பாடு தொடர்பில் சுகாதார அமைச்சு...

2025-06-15 23:25:35
news-image

எலிக்காய்ச்சலால் பரவல் தீவிரம்: பொதுமக்கள் அவதானத்துடன்...

2025-06-15 21:29:17