பெண் நோயியலில் பல நோய்கள் உள்ளன. அவற்றில் சில மிகவும் பாரதூரமான கடுமையான நோய்களாக உள்ளன. அவற்றில் புற்றுநோய்கள் என்றாலே எவரும் அஞ்ச வேண்டிய விடயம். பெண்களில் சூலகத்தில் ஏற்படும் சூலகப் புற்றுநோய்கள் மிகவும் கொடூரமான நோயாகவே இருந்த வண்ணம் உள்ளது. பெண் நோயியலில் எனது கடந்த பல வருடகால சேவையின் அனுபவத்தில் இருந்து உணர்ந்த விடயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கின்றேன்.

நோய்கள் ஏற்படும்போது நோய் அறிகுறிகளும் தெரிவது வழக்கம். ஆனால் சூலகப் புற்றுநோய் என்பது நோய் அறிகுறிகள் எதுவும் வெளிக்காட்டாமல் குறுகிய காலத்திலேயே வளர்ந்து, படர்ந்து நோயாகத் தீவிரமடைந்து ஆபத்தான நிலைக்கு பெண்களை இட்டுச் செல்வது மிகவும் வருந்தத்தக்க விடயமாக உள்ளது. கடந்த சில வருடங்களிலேயே நடுத்தர வயதுடைய 35– 40 வயதுப் பெண்கள் கூட இவ்வாறு சூலகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திடீர் என வந்து நிற்கும்போது மிகவும் கவலையாக உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கு நோய் அறிகுறிகள் எதுவும் இருக்கவில்லையே எனத்தான் கூறுகிறார்கள். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாறான சூலகப் புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிய பரிசோதனைகள் இல்லையா? என்ற கேள்வியைத்தான் எழுப்புவார்கள். இதற்கான பதில் என்னவென்றால் மற்றைய நோய்களைப் போல் நோய் ஆரம்பிக்கும் போதே சரியாக கண்டறியக் கூடிய பரிசோதனைகள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். எனவே ஆரம்பத்தில் சரியான நோய் அறிகுறிகளும் சரியான ஆரம்ப பரிசோதனைகளும் இல்லாமல் குறுகிய காலத்திலேயே ஆபத்தான நோயாக உருவெடுக்கும் சூலகப் புற்றுநோய் பற்றி பெண்கள் நன்கு அறிந்திருப்பது அவசியம்.
சூலகப் புற்றுநோய்கள் பெண்களின் சூலகத்தில் இருந்து ஆரம்பிக்கின்றது. ஒவ்வொரு பெண்ணிலும் இரண்டு சூலகங்கள் கர்ப்பப்பையின் அருகில் உள்ளன. சூலகப் புற்றுநோய் சூலகத்தில் சிறிய கட்டியாக ஆரம்பித்து பின்னர் மிகவிரைவில் அருகிலுள்ள இழையங்களுக்கும் பரவத் தொடங்குகின்றது. கறையான் புற்றெடுப்பதுபோல் புற்றுநோயும் புற்று புற்றாக பரந்து படர்கின்றது. இத்தகைய சூலகப் புற்றுநோய் பரவும்போது பெண்ணின் அடி வயிற்றில் உள்ள உள் உறுப்புகள் யாவும் ஒன்றுடன் ஒன்று ஒட்டப்பட்டு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகின்றன. இதனால் தான் சூலகப் புற்றுநோய் மற்றைய உறுப்புகளுக்கும் பரவிய பின்னர் அறுவைச் சிகிச்சை செய்து அகற்றுவதும் கடினமாக உள்ளது. சில வேளைகளில் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாத நிலைமையும் ஏற்படும். இவ்வாறான நிலைமையிருந்தால் இந்நோயை குணமாக்குவதும் கடினமாகத்தான் இருக்கும்.
எனவே சூலகப் புற்றுநோய்கள் மிக ஆரம்பத்திலேயே கண்டறியப்பட வேண்டிய நோயாக உள்ளது. ஏனெனில் ஆரம்பத்தில் கண்டறியப்படும்போது சிகிச்சை அளிப்பதற்கு சுகமாகவே இருக்கும். சிகிச்சை மூலம் நோயை குணமாக்குவதும் சுலபமாக இருக்கும்.
சூலகப் புற்றுநோய் ஏற்பட பரம்பரைக்காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப பரம்பரை, தாய்வழி உறவுகளின் நிறமூர்த்தங்களும் இதற்கு பொறுப்பாக உள்ளன. எனவே பரம்பரையில் இது போன்ற சூலகப் புற்றுநோய் உள்ளவர்கள் கூடுதல் கவனமெடுத்து தகுந்த பரிசோதனைகள் செய்ய வேண்டும். எனினும் இது போன்ற சூலகப் புற்றுநோயை நோய் அறிகுறிகள் வரும்வரை காத்திருக்க முடியாது. இதற்கும் மேலே நாம் நோயை முளை அரும்பிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றால் சில பரிசோதனைகளை நடுத்தர வயதுடைய பெண்களில் வருடம் ஒருமுறை செய்துவர வேண்டும். அதாவது 35 வயது பெண்களிலிருந்து இதனை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு சாதாரண ஸ்கேன் பரிசோதனை மற்றும் இரத்தத்தில் செய்யப்படும் Ca 125 என்ற பரிசோதனை பெரிதும் உதவியளிக்கின்றது.
இவ்வாறான பரிசோதனையில் சந்தேகங்கள் இருக்கும்போது அல்லது சூலகத்தில் கட்டி ஆரம்பிக்கும்போது மேலும் தொடர்ந்து தாமதிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு சில வேளைகளில் CT ஸ்கேன் பரிசோதனை அல்லது லப்பிரஸ்கோப்பி பரிசோதனை பெரிதும் உதவி தரும். இதன் மூலம் சரியான நோயைக் கண்டறிந்து அதன்போது புற்றுநோயாக இருந்தால் பாதிக்கப்பட்ட சூலகத்தையோ அல்லது சூலகத்துடன் சேர்த்து கர்ப்பப்பையையோ அகற்ற வேண்டும். இதன் மூலம் நோயிலிருந்து விடுபட முடியும்.
எனவே சூலகப் புற்றுநோய் என்பது குறிப்பான நோய் அறிகுறிகள் இல்லாது திடீரென சூலகத்தில் கட்டியாக வளரும் ஒரு நோயாகும். நோய் குறுகிய காலத்தில் அருகிலுள்ள உறுப்புகளுக்கு பரவக்கூடும். எனவே ஒழுங்கான பரிசோதனைகள், வைத்திய ஆலோசனைகள், ஸ்கேன் பரிசோதனைகள், இரத்தப் பரிசோதனைகள் கிரமமாக மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வருமுன் கண்டறியலாம்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM