இன்றைய திகதியில் எம்மில் பலரும் உடல் எடை குறைப்பிற்காகவும், ரத்த அழுத்த கட்டுப்பாட்டிற்காகவும் வைத்தியர்களிடம் முறையான மற்றும் முழுமையான ஆலோசனையை பெறாமல் குடிநீரை இயல்பான அளவை விட கூடுதலாக அருந்துகிறார்கள்.
இவர்களுக்கு திடீரென்று இயல்பான அளவை விட கூடுதலாக குடிநீரை பருகுவதால் உடலில் இயல்பாக இருக்க வேண்டிய சோடியம் எனும் சத்தின் அளவு குறைகிறது.
இதன் காரணமாக அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஏற்படக்கூடிய சூழலும் உண்டாகலாம். இந்நிலையில் இதற்குரிய விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை குறித்து வைத்தியர்கள் விளக்கம் அளிக்கிறார்கள்.
குமட்டல், வாந்தி, பலவீனம், எரிச்சல், குழப்பம், தலைவலி, தசை பிடிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படுபவர்களுக்கு வைத்தியர்கள் ரத்த அழுத்தம், நரம்புகள், தசைகளின் செயல்பாடுகள் குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கிறார்கள்.
ஏனெனில் ரத்த அழுத்தத்தையும், நரம்புகள் மற்றும் தசைகளின் செயல் திறனை சீராக பராமரிப்பதில் சோடியம் எனும் உப்புச்சத்திற்கு கணிசமான பங்கிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் தண்ணீர் அருந்தும் விடயம் குறித்து நோயாளிடம் கேட்டு அறிந்து கொள்வர். அதன் பிறகு தண்ணீரை எந்த அளவிற்கு எந்த தருணத்தில் எப்படி பருக வேண்டும் என்பதனை விவரிப்பர். அதனுடன் மருந்தியல் சிகிச்சையும் வழங்கி இதற்கு நிவாரணம் அளிப்பர்.
வைத்தியர் ஸ்ரீதேவி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM