இந்திய அரசு மலையக மாணவர்களுக்கு வழங்கும் புலமைப்பரிசில்கள் விஞ்ஞானத்துறையை வளர்க்க பெரிதும் உதவ வேண்டும் என்றும் அந்த அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும் என்றும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.
கண்டியில் உள்ள உதவி இந்தியத் தூததுவர் வீ.எஸ் சரன்யாவிடம் இது விடயமாக அவர் கோரிக்கை விடுத்தார். கண்டியில் வைத்து அவர் உதவித் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தா்ர.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்திய அரசு பெருந்தோட்ட மக்களது கல்வி அபிவிருத்திக்காக பாரிய சேவைகளைச் செய்து வருகிறது. அதனூடாகப் பலர் நன்மையடைந்துள்ளதுடன் தொடர்ந்தும் அப்பயணம் தொடர்கிறது.
விஞ்ஞானத்துறையைப் பொருத்தவரை மலையக பிரதேசங்களின் ஆசிரியர்களின் வான்மை விருத்தி உதவினாலும் எண்ணிகை அடிப்படையில் அது உயரவில்லை. எனவே எண்ணிக்கை அடிப்படையில் உயர்த்த திட்டங்கள் தேவை.
இலங்கைத் தோட்டத் தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் ( CEWET) கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு க.பொ.த ( உ/த) மற்றும் பல்கலைக்கழக கற்கை நெறிகளுக்கு குறிப்பிட்ட ஒரு தொகை உதவிப் பணம் புலமைப் பரிசிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு மேலதிகமாக அவ்வாறு உதவி பெறும் மாணவர்களுள் சிறந்த பெறுபேறுகளைப் பெறும் சிலருக்காவது இந்தியாவுக்கு சென்று பட்டப்படிப்பு, பட்டப்படிப்பின் மேல் படிப்புகளைத் தொடரும் வகையில் புலமைப் பரிசில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட வேண்டும்
மேலும் 75 ஆண்டுகளுக்கு மேல் நிதி உதவியை மாத்திரம் வழங்கிவரும் இந்தத் திட்டத்தில் சிறந்த பெறுபேறு பெறும் பயனாளி மாணவர்களுக்கு இந்தியா சென்று பட்டம், பட்டப்பின் கற்கைகளை தொடரும் வகையிலான புலமைப் பரிசில் திட்டங்களை வழங்குவதற்கு இந்திய அரசு முன் வர வேண்டும்.
அதே நேரம் உயர் தர விஞ்ஞான பிரிவில் சித்திகளைப் பெற்ற போதும் இலங்கை அரச பல்கலைக் கழகங்களில் வாய்ப்புக்கள் கிடைக்காத மலையக மாணவர்களுக்கு இந்திய புலமைப் பரிசில்களை வழங்குவது சிறந்த ஏற்பாடாக அமையும். இது குறித்து இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் கண்டி காரியாலயத்துக்கே அதிக பொறுப்பு உள்ளன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM