இன்றைய சூழலில் எம்மில் பலரும் பல வகையினதான போட்டிகளை எதிர்கொண்டு தான் வாழ்க்கையை நடத்த வேண்டியதிருக்கிறது. இந்த தருணத்தில் சிறிதளவாவது எம்மிடம் அதிர்ஷ்டம் இருந்தால் தான் எம்முடைய கடின உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். இந்த தருணத்தில் அதிர்ஷ்டத்தை எப்படி ஏற்படுத்திக் கொள்வது? என பலரும் கவலை கொள்வார்கள். இதற்கும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான மந்திர உச்சாடன வழிபாட்டை முன்மொழிந்திருக்கிறார்கள்.
நீங்கள் நாளாந்தம் தொழிலுக்கு அல்லது வாழ்வாதாரத்திற்காக வீட்டிலிருந்து வெளியே புறப்படுவதற்கு முன் இறை வணக்கம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
அந்த இறை வணக்கத்தின் போது நீங்கள் எந்த ராசி ராசியில் பிறந்திருக்கிறார்களோ அந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் பிரத்யேக மந்திரத்தை 108 முறை அல்லது உங்களுக்கு சௌகரியமான எண்ணிக்கையில் ( 11, 21, 48, 51 ) அந்த மந்திரத்தை உச்சரித்தால் உங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் கிடைக்கும்.
எம்மில் சிலர் எப்போது அதிர்ஷ்டம் வேண்டும் என நினைக்கிறோமோ..! அந்த தருணத்தில் மட்டும் சொன்னால் போதுமா? என கேள்வி கேட்பர். வேறு சிலர் இந்த மந்திரத்தை தவறாக உச்சரித்தால் ஏதேனும் அபசகுணம் ஏற்பட்டு விடுமா? என சந்தேகம் கேட்பர்.
தொடக்கத்தில் இந்த மந்திரம் உங்களுக்கு கை வர வில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம் . தொடர்ந்து முயற்சித்தால் 21 நாட்களில் இந்த மந்திரம் உங்களுடைய நாவில் இயல்பாக வரத் தொடங்கும். அதன் பிறகு நாளாந்தம் நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உச்சரித்தால் அதிர்ஷ்டம் உண்டாகும். அதனூடாக உங்களது வாழ்வாதாரம் சிறக்கும்.
இனி மேஷம் முதல் மீனம் வரையிலான பனிரெண்டு ராசியினருக்கான அதிர்ஷ்டத்தை வழங்கும் மந்திரத்தை காண்போம்.
மேஷம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
ரிஷபம் - ஓம் ஐம் க்லீம் ஶ்ரீம்
மிதுனம் - ஓம் க்லீம் ஐம் சௌம்
கடகம் - ஓம் ஐம் க்லீம் ஶ்ரீம்
சிம்மம் - ஓம் ஹ்ரீம் ஶ்ரீம் சௌம்
கன்னி - ஓம் ஶ்ரீம் ஐம் சௌம்
துலாம் - ஓம் ஹ்ரீம் க்லீம் ஶ்ரீம்
விருச்சிகம் - ஓம் ஐம் க்லீம் சௌம்
தனுசு - ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்
மகரம் - ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஶ்ரீம் சௌம்
கும்பம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஶ்ரீம்
மீனம் - ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஶ்ரீம்
இந்த மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்து வரும் தருணத்தில் உங்களுடைய செல்வ நிலை முன்பை விட உயர்ந்திருப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM