வளர்ச்சியடைந்த நாடாக தன்னிறைவு பெறுவதற்கு பௌத்த தர்மத்தின் வழிகாட்டுதலில் செயற்படவேண்டும் - சஜித் பிரேமதாச

10 Jun, 2025 | 07:17 PM
image

(நமது நிருபர்)

நாடாக வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெறவதற்காக பௌத்த தர்மம் காட்டிய சரியான வழிகாட்டுதலைப் பெற்று முன்னேறுவதற்கு நாம் செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

போதிக்கப்பட்ட மகத்தான தர்மத்தை எடுத்துக்கொண்டு இந்த நாட்டிற்கு வருகை தந்த மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவுகூர்ந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் நாட்டு மக்கள் மிகுந்த பக்தி வழிபாட்டுடன் பொசன் விழாவைக் கொண்டாடுகின்றனர்.

மஹிந்த தேரரின் இலங்கை வருகையுடன் நம் நாட்டிற்கு பௌத்த தர்மம் மட்டுமல்லாமல் கலைகள், கலாசாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 18குலங்களின் நிபுணர்களின் வருகையும் கிடைத்ததாக வரலாற்று ஆதாரங்கள் சான்று தருகின்றன. அந்தக் கலைகள் நம் நாட்டின் கலாசாரத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது.

அதுவரை மரங்களையும், கற்களையும் வணங்கிக் கொண்டிருந்த மக்களின் வாழ்க்கைக்கு அர்த்தமும் சரியான தர்மமும் கிடைத்தது. அந்த தர்மமும் கலைகளும் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் நாட்டின் முன்னேற்றம் உருவானது.

மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் பௌத்த தர்மத்துடன் இணைந்ததுடன் அது மிகவும் சிறந்த அரச நிர்வாகம் மற்றும் மக்கள் வாழ்க்கையை உருவாக்குவதில் முக்கிய காரணமாக அமைந்தது. அதனால்தான் நம் நாடு உலகம் முழுவதும் கீழைத்தேச தானியக் களஞ்சியம் என்று பிரசித்தம் பெற்றது.

ஆனால் உண்மையில் நம் நாடு இப்போது அந்த நிலையில் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. எனவே மீண்டும் ஒருமுறை நம் நாடாக எழுந்து நிற்க வேண்டும்.

நாடாக வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெற வேண்டும். அதற்காக பௌத்த தர்மம் காட்டிய சரியான வழிகாட்டுதலைப் பெற்று முன்னேறுவதற்கு நாம் செயல்பட வேண்டும்.

மற்ற மதங்களுக்கு உரிய சரியான இடத்தைக் கொடுத்து பௌத்த தர்மத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பாக இருக்க வேண்டும். அந்த பொறுப்பை தவறாமல் நிறைவேற்றுவதற்கு இந்த பொசன் தினத்திலிருந்து அனைவரும் உறுதியுடன் செயற்படுவோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு முன்னாலுள்ள கடைத்தொகுதியில்...

2025-06-16 09:09:09
news-image

07 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-16 09:12:36
news-image

இன்றைய வானிலை 

2025-06-16 06:07:20
news-image

“ இலங்கையின் மீட்பு பாதை -...

2025-06-15 20:11:07
news-image

சஜித் - நாமல் இணைந்து ஆட்சியமைப்பதாகக்...

2025-06-15 20:09:24
news-image

வவுனியா மாநகரசபையின் முதல்வராக காண்டீபன்? ; ...

2025-06-16 03:55:17
news-image

வவுனியா மாநகரசபையில் நாங்களே ஆட்சியமைப்போம் -...

2025-06-16 03:36:26
news-image

ஓட்டமாவடியில் ஒரே நேரத்தில் இரு இடங்களில்...

2025-06-16 03:37:24
news-image

ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதலை இலங்கை...

2025-06-16 03:21:05
news-image

ஐக்கிய மக்கள் சக்தி தற்போது தெரிவு...

2025-06-16 02:57:36
news-image

கொழும்பில் ஆட்சியமைப்பது இலகுவானதல்ல ; இறுதிவரை...

2025-06-15 20:06:34
news-image

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைக்க எந்தவொரு...

2025-06-15 18:33:56