உணவு சுவையூட்டிகள், நறுமணமூட்டிகள் மற்றும் எண்ணெய் உற்பத்தியில் ஐரோப்பாவின் புகழ் பெற்ற நிறுவனமான Frey+Lau இன் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான Ceyoka நிறுவனம், இந்நாட்டின் இனிப்புப் பண்டங்கள் உற்பத்தி துறைக்காக உயர் தரம் வாய்ந்த உற்பத்தித் தெரிவுகளை அறிமுகம் செய்துள்ளன.

“இனிப்புப் பண்டங்கள், உணவு-பானங்கள், ஐஸ்கிறீம், மருந்துகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு துறைகளில் ஈடுபட்டுள்ள F+L நிறுவனத்தின் சுவையூட்டிகள் மற்றும் நறுமணமூட்டிகளில் காணப்படும் உயர் குணம் மற்றும் வெவ்வேறு தன்மை தொடர்பிலும், எமது நறுமணமூட்டிகள், நறுமண எண்ணெய் வகைகள் மற்றும் சுவையூட்டிகளின் ஒப்பற்ற சேர்மானங்கள் மற்றும் செயற்திறனை அனுபவிப்பது தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்” என Ceyoka நிறுவனத்தின் சுவையூட்டிகள் பிரிவின் பதில் முகாமையாளர் வென்டோல் லொவி குறிப்பிட்டார்.

“F+L நிறுவனம் நறுமண எண்ணெய் வகைகள் உற்பத்திக்காக பயன்படுத்தும் இயற்கை வளங்கள், ஏனைய நறுமணமூட்டிகளுடன் ஒப்பிடுகையில் Ceyoka நறுமணமூட்டிகளை வேறுபடுத்தும் காரணியாக அமைந்துள்ளது. 

மற்றுமொரு போட்டிகரமான நிறுவனமாக அல்லாமல், F+L நிறுவனம் புகழ்பெற்ற சுவையூட்டல் மற்றும் நறுமணமூட்டல் உற்பத்திக்காக சாறாக பெறப்பட்ட எண்ணெய் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. உற்பத்திகளில் காணப்படும் உயர் தரம் மற்றும் நறுமணத் தெரிவுகள் காரணமாக வெவ்வேறு நிறுவனங்களின் மற்றும் உற்பத்தியாளர்களின் முன்னணித் தெரிவாக F+L உற்பத்திகள் காணப்படுகின்றன” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

நவீன இயந்திர சாதனங்கள், காய்ச்சி வடித்தல் செயற்பாடு, ஒப்பற்ற தொழில்நுட்ப நிபுணத்துவம் மூலம் பாவனையாளர்களின் தேவைகளுக்கு பொருத்தமான உற்பத்திகளை வழங்கும் F+L உற்பத்தித் தெரிவுகள் மூலமாக துறையில் முன்னோடியான நறுமணமூட்டல் மற்றும் சுவையூட்டல் தீர்வுகளை இந்நாட்டின் இனிப்புப் பண்டங்கள் துறைக்கு பங்களிப்புச் செய்ய Ceyoka நிறுவனத்தால் முடிந்துள்ளது.

Ceyoka நிறுவனம் வழங்கும் சுவையூட்டல் மற்றும் நறுமணமூட்டல் தயாரிப்புகள், வெப்ப மற்றும் குளிர்ச்சியான செய்பக்குவம், எண்ணெய் மற்றும் நீர் ஆகியவற்றில் கரைக்கும் முறை உள்ளடங்கலாக வெவ்வேறு விதிமுறைகளுக்கு உள்ளடக்கப்படக்கூடியமை விசேட தன்மைகளாக அமைந்துள்ளன. குளிரூட்டல் செயற்முறையின் போது குறித்த வெப்பநிலை வரை சுவையை பேண முடியும் என்பதுடன், வெப்பமூட்டல் செயற்பாட்டின் போது உயர் வெப்பநிலையில் சுவையை பேணுவதற்கு இந்த தயாரிப்பின் இயலுமையாக அமைந்துள்ளது.

மேலும், நீரில் கரையும் பவுடர் நிலையில் காணப்படும் பிரத்தியேக தூய்மையை உற்பத்தி நிறுவனங்களின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் திரவ நிலை அல்லது சிறு பரல்கள் நிலையில் பெற்றுக் கொடுப்பதற்கு Ceyoka நிறுவனம் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

நாளாந்தம் மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் தமது சேவைகளை பெற்றுக் கொடுக்கவும் தம்மை அர்ப்பணித்துள்ள Ceyoka நிறுவனம், நெகிழ்ச்சித்தன்மையான சேவைகளை, மிகவும் போட்டிகரமான விலைகளில் பெற்றுக் கொடுக்கிறது. உயர் தரத்தில் மற்றும் நீண்ட காலம் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய திறனைக் கொண்ட Ceyoka சுவையூட்டிகள் மற்றும் நறுமணமூட்டிகள் உற்பத்திகள் சந்தையில் புதிய பரிமாணங்கள் பலதை ஏற்படுத்திய வண்ணமுள்ளது.