தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யா அதிரடியான வேடத்தில் நடித்திருக்கும் 'அனந்தன் காடு' எனும் திரைப்படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
' ரன் பேபி ரன் ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான மலையாள இயக்குநர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகும் ' அனந்தன் காடு' எனும் திரைப்படத்தில் ஆர்யா கதையை வழி நடத்திச் செல்லும் மைய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் அச்யுத் குமார், சுனில் என பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். எஸ் யுவா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி அஜனீஸ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார். முரளி கோபி திரைக்கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்தை மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரித்திருக்கிறார்.
'அனந்தன் காடு' எனும் தலைப்பிற்கு படக்குழுவினர் வெளியிட்டிருக்கும் காணொளியில் இடம் பிடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதனால் இந்த காணொளி வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM