பாலகிருஷ்ணா நடிக்கும் 'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு

Published By: Digital Desk 2

10 Jun, 2025 | 07:27 PM
image

கலைத்துறையில் சிறந்த சேவையை செய்ததற்காக இந்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதான 'பத்மபூஷண் ' விருதை இந்த ஆண்டில் வென்ற நடிகர் பாலகிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் தயாராகும் 'அகண்டா 2 : தாண்டவம்' எனும் பான் இந்திய திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தெலுங்கின் முன்னணி இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் உருவாகும் 'அகண்டா 2 : தாண்டவம் ' திரைப்படத்தில் பாலகிருஷ்ணா, சம்யுக்தா ,ஆதி , உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

ஸ்ரீராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசைமமைக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள் இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி வழங்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. டீசரில் நடிகர் பாலகிருஷ்ணாவின் எக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது . இதன் காரணமாக இந்த டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் தெலுங்கில் 15 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களாலும்,  ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட ஏனைய சர்வதேச ரசிகர்களாலும் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

நடிகர் பாலகிருஷ்ணாவின் வயது 65. அவருடைய  பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்காக தயாரிப்பாளர்கள் 'அகண்டா 2 : தாண்டவம் ' படத்தின் டீசரை வெளியிட்டு அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 25 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் , தெலுங்கு,  மலையாளம்,  கன்னடம்,  இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right