ரியோ ராஜ் நடிக்கும் 'ஆண்பாவம் பொல்லாதது' பட அப்டேட்

Published By: Digital Desk 2

10 Jun, 2025 | 07:27 PM
image

' ஜோ' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகர் ரியோ ராஜ் இளமை ததும்பும் இளம் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'ஆண் பாவம் பொல்லாதது' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜோடி பொருத்தம்' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆண் பாவம் பொல்லாதது ' எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர். ஜே. விக்னேஷ் காந்த் , ஷீலா , ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்திருக்கிறார். காதலர்கள் விரும்பும் வாழ்வியலை வண்ணமயமாக சித்தரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் தயாரித்திருக்கிறார்.

விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ' மறச்சேனே நெஞ்சில் மறச்சேனே..' என தமிழ் வார்த்தைகளில் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.  காதலர்களுக்கு இடையேயான உரையாடலுடன் தொடங்கும் இந்தப் பாடல் .. இந்தி மொழி பாடல் வரியுடன் தொடங்குவது ஒரு தரப்பு ரசிகர்களை கவரவில்லை என்றாலும், அதனைத் தொடர்ந்து காதல் உணர்வை வெளிப்படுத்தும் வரிகளாலும் , இதயத்தை வருடும் இசையாலும் வசீகரிக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுத, பின்னணி பாடகர் எம் .லக்ஷ்மிகாந்த் பாடியிருக்கிறார். 

தமிழ் திரைப்படத்தில் தலைப்புகள் தான் வேற்று மொழியில் சூட்டப்படுகிறது என்றால்.. தமிழ் திரைப்படத்தின் பாடலிலும் இந்தி மொழி பாடல் வரிகள் இடம் பிடித்திருப்பது மறைமுக திணிப்பாகத் தான் கருத வேண்டும் என தமிழ் திரையிசை ரசிகர்கள் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right