தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முன்னணி வேடத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' எனும் படத்தில் இடம்பெற்ற ' பொட்டல முட்டாயே ' எனும் முதல் பாடலும் , பாடலுக்கான பிரத்யேக காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
குடும்ப ரசிகர்களை கவரும் வகையிலான படைப்புகளை வழங்கி தனித்துவமான இயக்குநர் என்ற முத்திரையை பெற்றிருக்கும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'தலைவன் தலைவி' எனும் திரைப்படத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். கிராமப்புற பின்னணியிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை பிரபல தயாரிப்பாளர் டி ஜி தியாகராஜன் வழங்குகிறார்.
இப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜின் பிறந்த நாளை முன்னிட்டு, படத்தில் இடம்பெற்ற 'வாடி என் பொட்டல முட்டாயே..' எனத் தொடங்கும் முதல் பாடலும் , பாடலுக்காக பிரத்யேகமாக படமாக்கப்பட்ட காணொளியும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னணி பாடகர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். கிராமிய பாடல்களுக்கான தாள லயத்தில் அமைந்திருக்கும் இந்த பாடல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM