நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியின் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பாதுகாக்கும் சங்கத்தின் (NTB WNPS) தேசத்தைக் கட்டியெழுப்பும் மாதாந்த விளக்கவுரை அமர்வு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த விளக்கவுரை அமர்வில் வனம் சம்பந்தப்பட்டது. புதுமை, புரிந்துணர்வுடன் கூடிய வனவிலங்குகளைப் புகைப்படம் பிடிக்கும் கலையின் புதிய யுகம் பற்றி விளக்கமளிக்கப்படவுள்ளது.
இந்த அமர்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்திலுள்ள ஜஸ்மின் மண்டபத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறும்.
இந்த அமர்வில் புகைப்படம் எடுத்தல் துறையானது பாதுகாப்பை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக எவ்வாறு உருவாகி வருகிறது என்பதை ஆராயும் ஒரு கவர்ச்சிகரமான விரிவுரையில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற வனவிலங்குகளைப் புகைப்படம் எடுக்கும் கலைஞரும் சொனி சர்வதேச வர்த்தகநாம தூதருமான லக்ஷித கருணாரத்னவுடன் ஒன்றிணையுங்கள்.
இலங்கையின் தொலைதூர காடுகள் முதல் ஆபிரிக்காவின் சமவெளி வரை கண்டங்களில் உள்ள வனவிலங்குகளை ஆவணப்படுத்துவதில் அனுபவமுள்ளவரான லக்ஷிதா, அதிநவீன புகைப்படக் கருவி தொழில்நுட்பங்கள் மற்றும் படைப்புத் துறை மேம்பாடுகள் ஆகியவை வரையறைகளுக்கு அப்பால் நின்று செயற்றினான முறையில் எவ்வாறு துணைபுரிகின்றன என்பதைப் பகிர்ந்து கொள்வார். அவரது பணி ஆவணப்படுத்தலுக்கு அப்பாற்பட்டது. அது கல்வி புகட்டக்கூடிய, புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய ஊக்கத்தைத் தூண்டும் வகையிலான காட்சி விவரிப்புகளை உருவாக்குகிறது.
இந்த விரிவுரைகளத்தில் புதுமைகளை ஈட்டித்தரக்கூடிய தன்மை வாய்ந்ததாகும். அது வனவிலங்குகளை ஆட்கொள்ளும் வகையிலான புதுமையான கோணங்களைக் கொண்டவையாக அமைந்திருக்கம். அவை வழிவழியாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட புதிய நடைமுறைகளை முன்னிலைப்படுத்தியதாக அமையும்.
ஆனால் இந்த அமர்வானது அடிப்படையில் "ஏன்" என்ற வினாவைக் கொண்டதாக அமைந்திருக்கம் – அது கற்பனையின் பின்னால் உள்ள ஆழமான அர்த்தத்தைக் கொண்டது. லக்ஷித தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்களை வழங்குவார், ஒவ்வொன்றும் படத்திற்குப் பின்னால் உள்ள உணர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாங்குகளை எடுத்துக்காட்டும் ஒரு கவர்ச்சிகரமான பின்னணியைக் கொண்டதாக அமைந்திருக்கும்.
இலங்கையின் அதிகரித்து வரும் மனித-யானை மோதல், பூர்வீக உயிரினங்கள் மீது பிளாஸ்டிக் கழிவுகளை வீசும் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் காட்டு வாழிகளின் பிளவுகள் உள்ளிட்ட வகையிலான தனது சமீபத்திய செயற்றிட்டங்களிலிருந்து அப்புகைப்படங்களை அவர் சமர்ப்பிக்கவுள்ளார். மேலும், புகைப்படங்கள் எவ்வாறு கலை ரீதியாகவும் மற்றும் குரல்கொடுத்துப் போராடுதல் ரீதியாகவும் செயலாற்றலாம் என்பதை ஆராய்ச்சி செய்பவராகவும் அவர் விளங்குகின்றார்.
படைப்பாற்றலை பாதுகாப்பு நெறிமுறைகளுடன் சமநிலைப்படுத்துதல், உணர்ச்சியைக் கிளப்பும் சூழ் நிலைகளைப் பொறுப்புடன் அணுகுதல் மற்றும் காட்சி ஊடாகக் கதைசொல்லல் மூலம் அறிவியலுக்கும் கொள்கை சார் முயற்சிகளுக்கும் துணைபுரிதல் போன்ற உள்ளார்ந்த அம்சங்களை இந்த அமர்வின் மூலம் பங்கேற்பாளர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
வணிக ரீதியாக ஒரு தேநீர் சுவைப்பவர் என்றும் றோயல் ஃபோட்டோகிராஃபிக் சொசைட்டியின் உறுப்பினர் என்றும் இந்த கௌரவத்தைப் பெற்ற முதல் இலங்கையராகிய லக்ஷித உலகளாவிய பாராட்டையும் ஈட்டிக்கொண்டுள்ளார். இதில் இயற்கையைச் சிறந்த முறையில் புகைப்படம் எடுக்கம் கலைஞர் என்றும் விண்ட்லேண்ட் ஸ்மித் ரைஸ் விருதுகள் என்றும் ஆண்டின் சிறந்த ஆபிரிக்க புகைப்படக் கலைஞர் என்றும் ஆசியா வனவிலங்கு சரணாலய விருதுகள் என்றும் அவர் ஈட்டிக்கொண்ட ஏராளமான பரிசுகள் இவற்றுள் அடங்கும்.
நவீன புகைப்படக் கலையின் எல்லைகளைத் தாண்டிச் சென்று செயலாற்றும் புகழ்பெற்ற ஆளமையாகிய லக்ஷித, விழிப்புணர்வு மற்றும் மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக புகைப்படக் கருவியைப் பார்க்கிறார். இயற்கை மயமான உலகத்தை வென்றெடுக்க கலையையும் புரிந்துணர்வையும் பயன்படுத்தி செயற்படுகின்ற ஒரு விரிவுரையாளரின் அமர்வில் கலந்து சிறப்பிப்பதற்கான ஒரு தவிர்க்க முடியாத வாய்ப்பு இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM