சாவகச்சேரியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்கள் விற்பனை செய்த மரத்தளபாட வர்த்தகர் கைது

Published By: Digital Desk 2

10 Jun, 2025 | 12:36 PM
image

சாவகச்சேரி பகுதியில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் வர்த்தகர் ஒருவர் சாவகச்சேரி பொலிஸாரால் திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக  பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி பகுதியில் உள்ள பிரபல பாடசாலை மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப் பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும்  வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதனை அடுத்து குறித்த வர்த்தகரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , அவரிடம் இருந்து 330 போதை மாத்திரைகளை பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன் குறித்த நபரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வேளையில் இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்து வருவதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் -...

2025-12-07 10:09:55
news-image

கற்பிட்டியில் போதைப்பொருளுடன் நான்கு பேர் கைது!

2025-12-07 09:25:55
news-image

மியன்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த...

2025-12-07 09:45:56
news-image

பாராளுமன்றமே நாட்டின் திசையை தீர்மானிக்க வேண்டும்...

2025-12-07 09:22:27
news-image

70 பில்லியன் ரூபா வெள்ள நிவாரண...

2025-12-07 09:57:04
news-image

950 மெட்ரிக் தொன் அவசர உதவி...

2025-12-07 08:31:22
news-image

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் 3...

2025-12-07 08:14:50
news-image

வாகரை கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம்...

2025-12-07 07:58:05
news-image

பாறை துளையிடும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர்...

2025-12-07 07:56:58
news-image

இன்றைய வானிலை

2025-12-07 06:22:23
news-image

பயிர் சேதங்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கி,...

2025-12-06 21:47:44
news-image

அவதானம் ! நாளை முதல் எதிர்வரும்...

2025-12-06 21:36:56