(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 2024க்கான ஹோம் லேண்ட்ஸ் ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் மிக உயரிய விருதுகளான வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதை கமந்து மெண்டிஸும் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை சமரி அத்தபத்துவும் வென்றெடுத்தனர்.
வளர்ந்துவரும் வீரருக்கான விருதை ஜனித் லியனகே தனதாக்கிக்கொண்டார்.
மகளிர் பிரிவில் வழங்கப்பட்ட 7 மொத்த விருதுகளில் 6 விருதுகளை சமரி அத்தபத்து வாரி அள்ளிக்கொண்டார்.
இந்த விருது விழா கொழும்பு, சினமன் லைவ் ஹோட்டலில் திங்கட்கிழமை (09) இரவு நடத்தப்பட்டது.
கமிந்து மெண்டிஸ் கடந்த வருடம் 9 டெஸ்ட் போட்டிகளில் 5 சதங்கள், 3 அரைச் சதங்களுடன் 1049 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதி சிறந்த துடுப்பாட்ட வீரர் விருதையும் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் வென்றெடுத்தார்.
மகளர் சர்வதேச அரங்கில் சமரி அத்தபத்து 9 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு சதம், 2 அரைச் சதங்கள் உட்பட 458 ஓட்டங்களைக் குவித்ததுடன் 9 விக்கெட்களைக் கைப்பற்றி இருந்தார்.
அத்துடன் 21 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 2 சதங்கள், 4 அரைச் சதங்களுடன் 720 ஓட்டங்களைப் பெற்றதுடன் 21 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இந்த பெறுபேறுகளின் அடிப்படையில் அவர் வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை வென்றெடுத்தார்.
இவ் விருது விழாவில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான விருதுகளுடன் உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த வீர. வீராங்கனைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது.
கிரிக்கெட் வீரர்களாகவும் நிருவாகிகளாகவும் முகாமையாளர்களாகவும் கிரிக்கெட் விளையாட்டின வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் பெரும் பங்காற்றிய ஸ்டன்லி ஜயசிங்க, சந்த்ரா ஷாவ்டர், ரஞ்சித் பெர்னாண்டோ, ஜானக்க பத்திரண ஆகியோருக்கும் பத்திரிகை துறையில் கிரிக்கெட் விளையாட்டுத்துறைக்கு பெரும் பங்காற்றிய பிறின்ஸ் குணசேகர (தினமின), ப்ரசன்ன சஞ்சீவ தென்னக்கோன் (லங்காதீப - ஞாயிறு) ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டது.
விளையாட்டுத்துறை அமைச்சர் சமன் குமார கமகே, ஹோம் லேண்ட்ஸ் நிறுவனங்கள் குழுமத்தின் அதிபர் நலின் ஹேரத், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா ஆகியோர் பிரதான விருதுளை வழங்கினர்.
சர்வதேச அரங்கில் விருதுகள் வென்றவர்கள்
வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீரர்: கமிந்து மெண்டிஸ்
வருடத்தின் அதிசிறந்த கிரிக்கெட் வீராங்கனை: சமரி அத்தபத்து
வளர்ந்துவரும் கிரிக்கெட் வீரர்: ஜனித் லியனகே.
ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: கமிந்து மெண்டிஸ்
சிறந்த பந்துவீச்சாளர்: பிரபாத் ஜயசூரிய
சிறந்த சகலதுறை வீரர்: தனஞ்சய டி சில்வா.
ஆடவர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: பெத்தும் நிஸ்ஸன்க
சிறந்த பந்துவீச்சாளர்: வனிந்து ஹசரங்க
சிறந்த சகலதுறை வீரர்: சரித் அசலன்க
ஆடவர் சர்வதேச ரி 20 கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீரர்: குசல் மெண்டிஸ்
சிறந்த பந்துவீச்சாளர்: வனிந்து ஹசரங்க
சிறந்த சகலதுறை வீரர்: வனிந்து ஹசரங்க.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை: சமரி அத்தபத்து
சிறந்த பந்துவீச்சு விராங்கனை: கவீஷா டில்ஹாரி
சிறந்த சகலதுறை வீராங்கனை: சமரி அத்தபத்து
மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட்
சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை: சமரி அத்தபத்து
சிறந்த பந்துவீச்சு வீராங்கனை: சமரி அத்தபத்து
சிறந்த சகலதுறை வீராங்கனை: சமரி அத்தபத்து.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM