1844 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட கார்கில்ஸ் நிறுவனம் இன்று 500 க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை கொண்டுள்ளதுடன் இத்துறையில் ஜாம்பவானாகவும் திகழ்ந்து வருகிறது. நம்நாட்டிலுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் வந்து இராணுவ படையிலும் பொலிஸ் படையிலும் இணைந்திருந்த இளம் வீரர்களது அர்ப்பணிப்பு என்னை மெய்சிலிர்க்க வைத்தது என ரஞ்சித் பேஜ் தெரிவித்தார்.
அவர்களைப் போன்று, தம்மாலும் தமது வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியுமா என தம்மைத் தாமே கேட்டுக் கொண்டதாகவும், அதிலிருந்து அந்த தேசிய வீரர்களின் குடும்பங்களுக்கு, கிராமங்களுக்கு மற்றும் சமூகத்துக்கு சேவையாற்றக்கூடிய வழி தொடர்பில் தாம் தொடர்ந்தும் கவனம் செலுத்தியதாகவும் ரஞ்சித் பேஜ் மேலும் தெரிவித்தார்.
கார்கில்ஸ் நிறுவனத்தின் 181 வருடகால வெற்றிப்பயணம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே பேஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அதன் அடிப்படையில், இலாபத்துக்கு அப்பால் சென்ற மக்கள் நலன் பேணும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக 2010 ஆம் ஆண்டில் கொத்மலே பால் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டு கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் தேசிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
வருமானத்திற்காக இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை நிறுத்த வேண்டும். பால் பதப்படுத்தும் நிலையங்கள், தூய பசும்பால் சேகரிப்பு நிலையங்கள் மற்றும் வழமையான நலன்பேணல் கட்டமைப்புகளை நிறுவுவதனூடாக கார்கில்ஸ் நிறுவனம், பாற்பண்ணையாளர்களுக்கு அவர்களது கிராமத்தினுள்ளேயே சிறந்த வருமானத்தை தேடிக் கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியான விலையில் நற்குணம்மிக்க உள்நாட்டு தயாரிப்புகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.
“உலக சுகாதார ஸ்தாபனம், நாளொன்றுக்கு, ஒருவர் 200 மில்லி லீற்றர் பாலை அருந்த வேண்டும் என தெரிவித்துள்ளது. ஆனாலும் பெருமளவான இலங்கை சிறுவர்கள் மந்த போஷாக்கு நிலைமையில் இருக்கின்றனர்.
மேலும் அப்போஷாக்கினை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு வழியில்லாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நீரில் சீனியை கலந்து கொடுக்கும் ஒரு பரிதாபகரமான நிலைமை காணப்படுவதை நான் அறிந்து கொண்டேன்.
அந்திலைமையிலிருந்து வெளிக்கொண்டு வர வேண்டும் அதனால் கொத்மலே பால் நிறுவனம் இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது “30 வருடங்களாக நிலவிய கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்ததுடன், வெற்றியீட்டியது எமது கிராமங்களின் இளைஞர் யுவதிகளே என்பதை குறிப்பிட வேண்டும்.
இன்று அந்த கிராமங்களில் இளைஞர் யுவதிகளில் பலர் பொருளாதார ரீதியில் வலுவடைவதற்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு வெளிநாடு செல்வது, நாட்டின் பொருளாதாரத்துக்காக அர்ப்பணித்து செயலாற்றக்கூடிய இளைஞர் தலைமுறையாகும்.
அதனால், இளைஞர் யுவதிகளுக்கு நம்நாட்டிலேயே பொருளாதாரத்தை வலிமைப்படுத்திக் கொள்ளக்கூடிய வியாபார மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு கார்கில்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
2044 ஆம் ஆண்டில் கார்கில்ஸ் நிறுவனம் தனது 200 வருட பூர்த்தியை கொண்டாடும் போது, பொருளாதார ரீதியில் வலுப்பெற்ற இலங்கையை காண்பது தமது எதிர்பார்ப்பாக அமைந்திருக்கும் .
எமது கிராமிய சமூகம், பொருளாதார மற்றும் போஷாக்கில் தன்னிறைவு அடையும் போது முழு நாடே அதன் பிரதிபலனை உணரக்கூடியதாக இருக்கும். அந்த வகையில், நன்றியுணர்வு, மூலோபாய தொலைநோக்கு மற்றும் கிராமிய மக்களுக்கு வலுவூட்டலுடன் நாட்டையே கட்டியெழுப்பும் முயற்சிக்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM