டயலொக் சுவர்ண சக்தி சிறப்புத் திட்டத்தின் வெற்றியாளருக்கு மாலைத்தீவு குடும்பப் பயணம் பரிசு

10 Jun, 2025 | 10:37 AM
image

இலங்கையின் நம்பர் 1 இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தனது சுவர்ண சக்தி loyalty திட்டத்தின் கீழ் ஒரு விசேட பிரசாரத்தின் ஒரு பகுதியாக, சிறந்த சில்லறை வர்த்தகப் பங்காளிகளில் ஒருவருக்கு மாலைத்தீவுக்கு  பிரத்தியேக குடும்ப விடுமுறையை வழங்கியுள்ளது. 

இலங்கையின் அனைத்துப் பகுதிகளுக்கும் டயலொக் சேவைகளை கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றும் சில்லறை வர்த்தகர்களைப் பாராட்டும் வகையில், வெற்றியாளர் ஒருவருக்கு நான்கு டிக்கெட்டுகளுடன் மாலைத்தீவுக்குச் சென்று தங்கள் குடும்பத்துடன் விடுமுறையை அனுபவிக்கும் அரிய வாய்ப்பை வழங்கியது.

WOW Super App உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்தப் பிரசாரம், நாடு முழுவதிலுமுள்ள சில்லறை வர்த்தகர்களிடமிருந்து சிறப்பான பங்கேற்பைப் பெற்றது. பெறப்பட்ட பல உள்ளீடுகளில் இருந்து, சாய் மல்டி சென்டரின் K. மதுஷான்ந்தன், மாலைத்தீவு குடும்ப விடுமுறைக்கான அதிர்ஷ்ட வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  – இது, அவர்களது மாறாத விசுவாசத்தையும், மிகச் சிறந்த பங்களிப்பையும் அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது.

டயலொக் சுவர்ண சக்தி திட்டம், 2024 நவம்பர் 6 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாடு முழுவதிலும் உள்ள 80,000 க்கும் மேற்பட்ட டயலொக் விற்பனை முகவர்களுக்கு WOW Super App ஊடாக அவர்கள் விரும்பிய பரிசுகளைத் தெரிவுசெய்து, தமது points-களை Redeem செய்து இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இதற்கமைய, 240 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 30,000 இற்கும் மேற்பட்ட பரிசுகள் இதுவரை நாடு முழுவதும் வெற்றிகரமாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 350 மில்லியன் ரூபா பரிசுத் தொகுதியுடன் இத்திட்டம் செயற்படுத்தப்பட்டதுடன், points-களை Redeem செய்யும் பல்வேறு முறைகளில் ஈடுபடும் அதே வேளையில், தமது points-களுக்கு அதிகூடிய பெறுமதியைப் பெற்றுக்கொள்ளவும் விற்பனை முகவர்களுக்கு முடிந்தது.

WOW தளத்தின் வாயிலாக,  சில்லறை விற்பனைப் பங்காளர்களுக்குக் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம் கிடைக்கிறது. அவர்கள் தங்கள் points-களுக்கு ஏற்ற பரிசுகளைத் தேர்வு செய்யலாம் அல்லது அதிக மதிப்புள்ள பொருட்களைத் தேர்ந்தெடுத்து, மீதமுள்ள தொகையைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பரிசுகள் அனைத்தும் இலவசமாக அவர்களின் வீட்டு வாசலுக்கே வந்து சேரும்.

இலங்கைக்குத் தொடர்ச்சியான இணைப்புச் சேவைகளை வழங்குவதில் காட்டும் சிறப்பான பங்களிப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் டயலொக், தனது ஒவ்வொரு சில்லறை வர்த்தகப் பங்காளிக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

டயலொக் அணியின் சார்பாக, இடமிருந்து வலமாக: ரமித் ஹேரத் (Partner Associate – Super App), பியுமி ஜெயசிங்க (Senior Executive – Super App Campaign Planning), செல்வராஜா வினோத் (Associate Area Manager – National Sales – தேசிய விற்பனை), மற்றும் அமில திசேரா (பிராந்திய மேலாளர் – வட பிராந்திய செயற்பாடுகள்) ஆகியோர் வெற்றியாளர் கே. மதுஷான்ந்தன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு டிக்கெட்டுகளை வழங்கினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்கேன் தரு திரிய’ ஊடாக மஹியங்கனை,...

2025-06-12 16:30:51
news-image

LOLC குழுமத்தில் ரூபா. 41 பில்லியன்...

2025-06-12 12:29:00
news-image

AIA பொசன் வந்தனா - யாத்ரீகர்களுக்கான...

2025-06-12 12:14:32
news-image

மலைநாட்டு தலைநகரில் உயர் கல்வி மாற்றத்திற்கு...

2025-06-12 12:34:32
news-image

Kedella Construction Expo 2025 உடனான...

2025-06-11 12:09:07
news-image

SLT-MOBITEL முதல் காலாண்டில் நிலையான இலாப...

2025-06-11 12:06:41
news-image

எதிர்காலத்தில் இலங்கை: கொத்மலே மூலம் கிராமிய...

2025-06-10 11:04:57
news-image

டயலொக் சுவர்ண சக்தி சிறப்புத் திட்டத்தின்...

2025-06-10 10:37:41
news-image

கிறேஷியன் நிதியம், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை...

2025-06-06 19:09:18
news-image

32 ஆவது கிறேஷியன் பரிசுக்கான இறுதிப்பட்டியலை...

2025-06-06 14:34:33
news-image

இலங்கை-அவுஸ்திரேலியா கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு –...

2025-06-05 11:27:22
news-image

அசல் தாய்லாந்து உணவுகளுக்கான முன்னோடி உணவகமான...

2025-06-04 18:10:41