bestweb

கொள்கலன்களில் ஆயுதம் இருக்கவில்லை என்று சீவலி அருக்கொட, சம்பத் துய்யகொந்த சோதிடம் கணித்தா குறிப்பிட்டார்கள்? - கம்மன்பில

09 Jun, 2025 | 06:24 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பரிசோதனையின்றி விடுவித்த கொள்கலன்கள் தொடர்பான பட்டியல் மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன. சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் பதில்கள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளன. சிவப்பு முத்திரை பதித்த கொள்கலன்களை நிச்சயம் பரிசோதிக்க வேண்டும் என்பதை பணிப்பாளர் நாயகம் அறியவில்லையா, வினவிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.கொள்கலன்களில் ஆயுதம் இருக்கவில்லை என்று சீவலி அருக்கொட, சம்பத் துய்யகொந்த சோதிடம் கணித்தா குறிப்பிட்டார்கள் என  பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

சுங்கத்தில் இருந்து பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை  தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு  திங்கட்கிழமை (9) வாக்குமூலம் அளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் சகல விடயங்களையும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முன்வைத்தேன்.

இந்த கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவிப்பதற்காக கடந்த டிசெம்பர் மாதம் துறைமுகத்தில் திட்டமிட்ட வகையில் கொள்கலன் நெரிசல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொள்கலன்கள் நெரிசலுக்கு தீர்வு காண்பதற்காக  2024.12.13 ஆம் திகதியன்று ஜனாதிபதி அமைச்சரவை பத்திரம் ஒன்றை முன்வைத்து கொள்கலன்கள் நெரிசலுக்கு குறுகிய கால தீர்வு காண்பதற்குரிய யோசனைகளை முன்வைப்பதற்கு  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் குழு ஒன்றை நியமிக்க பரிந்துரைத்துள்ளார்.

இந்த பத்திரத்துக்கு அமைய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை அமைச்சரவையில் முன்வைக்குமாறு அமைச்சரவையின் செயலாளர் பிமல் ரத்நாயக்கவுக்கு அறிவித்துள்ளார். 

ஆனால் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டு இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு சுங்கத்திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.இது முற்றிலும் சட்டவிரோதமானது.

சிவப்பு முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை பரிசோதனையின்றி விடுவிப்பதற்கான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் துறைமுக அமைச்சருக்கோ அல்லது நிதியமைச்சருக்கோ கிடையாது.

2025.ஜனவரி மாதம் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் சுங்கத்தில் இருந்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள்  பரிசோதனையின்றிய வகையில் விடுவிக்கப்பட்டுள்ளன.

4 வகையான வழிமுறையில் கொள்கலன்கள் விடுவிக்கப்படும். பச்சை நிற முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் எவ்வித பரிசோதனைகளுமின்றி வகையில் விடுவிக்கப்படும். 

நீல நிற முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்படும்.இருப்பினும் அந்த கொள்கலன்கள் சென்றடையும் இடத்துக்கு சென்று பரிசோதிக்க முடியும்.

மஞ்சள் நிற முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களின் ஆவணங்கள் பரிசீலனை செய்யப்படும். அவசியமாயின் பண்டங்களும் பரிசோதிக்கப்படும்.சிவப்பு நிற முத்திரை பதிக்கப்பட்ட கொள்கலன்களை நிச்சயம் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும். 

அனைத்து கொள்கலன்களையும் பரிசோதிக்க முடியாது. 60 சதவீதமான கொள்கலன்கள் பரிசோதிக்காமல் விடுவிக்கப்படுகின்றன என்று சுங்கத்திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகிறார்.

அனைத்தை கொள்கலன்களையும் பரிசோதிக்க வேண்டும் என்று எவரும் குறிப்பிடவில்லை. சிவப்பு முத்திரை பதித்த கொள்கலன்களை ஏன் பரிசோதிக்காமல் விடுவிக்க வேண்டும் என்பதையே கேள்கிறோம். 

மேலதிக பணிப்பாளர் நாயகத்தின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சுங்கத்தில் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது என்பது வெளிப்படுகிறது.இந்த கொள்கலன்களில் ஆயுதம் இருப்பதாக நாங்கள் குறிப்பிடவில்லை. சுங்க தொழிற்சங்கத்தினரே குறிப்பிடுகிறார்கள்.

பரிசோதனையின்றி விடுவித்த கொள்கலன்கள் தொடர்பான பட்டியல் மற்றும் ஆவணங்கள் என்னிடம் உள்ளன.270 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகிறார், 323 கொள்கலன்கள் என்று சுங்;க தொழிற்சங்கத்தினர் குறிப்பிடுகின்றனர்.

 எனக்கு கிடைத்துள்ள பட்டியலில் 371 கொள்கலன்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவண பட்டியலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒப்படைத்துள்ளேன். 

கொள்கலன்களில் எண்ணிக்கையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றமை இதில் ஏதேனும் முறைகேடு இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் முறையான தீர்வினை முன்வைக்காத காரணத்தால் கொள்கலன்கள் தொடர்பான ஆவணங்களை வெளிப்படுத்தியுள்ளேன்.

இந்த 323 கொள்கலன்களில் கைத்தொழில் மூலப்பொருட்கள் இருந்ததாக சுங்கத் திணைக்களம் எவ்வித பரிசோதனைகளுமில்லாமல் குறிப்பிட்டுள்ளது.

 ஆயுதங்கள் ஏதும் இல்லை என்று  சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் சீவலி அருக்கொட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகிறார்கள்.

பரிசோதிக்காமல் கொள்கலன்களில் இருப்பதை இவ்விருவரும் குறிப்பிடுவார்களாயின் கோடிக்கணக்கில் செலவழித்து சுங்கத்தில் ஸ்கேன் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளமை பயனற்றது என்றே குறிப்பிட வேண்டும்.

பரிசோதனை செய்யாமல் கொள்கலன்களில் ஆயுதம் இருக்கவில்லை என்று  சுங்கத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், பாதுகாப்பு அமைச்சரும் குறிப்பிடுவார்களாயின் அவர்களுக்கு சோதிடம் பார்க்கும் வேளையை ஒப்படைக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28