இன்றைய திகதியில் எம்மில் பலரும் ஆரோக்கியம் குறித்த தகவல்களை இணையத்தில் வாசித்து தெரிந்து கொள்கிறார்கள். நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் வைத்தியசாலைக்கு சென்று சத்திர சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசனை பெறும் போது இவர்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ தகவல்களை அவர்களிடத்தில் தெரிவித்து, அதனை நோயாளியின் சந்தேகமாக எழுப்புகிறார்கள்.
குறிப்பாக கழுத்து பகுதியில் சேதமடைந்த நரம்பினை மீட்பதற்கு கீ ஹோல் எனப்படும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ளலாமா? என கேட்கிறார்கள். இதற்கு வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
பொதுவாக தண்டுவட பாதிப்பிற்காக மேற்கொள்ளப்படும் நவீன சத்திர சிகிச்சையான கீ ஹோல் சர்ஜேரி - மைக்ரோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜேரி, எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜேரி, இன்டைரக்ட் டீ கம்ப்ரஷன் என மூன்று வகையினதாக வகைப்படுத்தப்படுகிறது.
இதில் மைக்ரோஸ்கோபிக் பைன் சர்ஜேரி என்பது - தண்டுவடப் பகுதியில் ஒரு நுண்ணோக்கி மூலம் உடலியல் கூறுகளை எந்தவித பாதிப்பும் இல்லாமல் எங்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அங்கு சத்திர சிகிச்சையை நுண்துளை மூலம் மேற்கொள்வது இதனைத் தொடர்ந்து எண்டோஸ்கோபிக் ஸ்பைன் சர்ஜேரி என்பது- கமெரா மூலம் தண்டுவடப் பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தை துல்லியமாக அவதானித்து அங்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வது இன் டைரக்ட் டீ கம்ப்ரஷன் என்பது வயிற்றின் வழியாக நுண்துளை ஏற்படுத்தி அதனூடாக சத்திர சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவது. இந்த மூன்று வகையினதான சத்திர சிகிச்சை தான் நுண்துளை நவீன சத்திர சிகிச்சையின் வகையாகும்.
இதில் நோயாளியின் முதுகு தண்டுவட பகுதியில் பாதிப்பு எங்கு ஏற்பட்டிருக்கிறது? எந்த அளவு பாதிப்பு இருக்கிறது? என்பதனை துல்லியமாக அவதானித்து, அதற்கு நிவாரணம் அளிப்பதற்கு எத்தகைய சத்திர சிகிச்சை உகந்ததாக இருக்கும் என்பதனை சத்திர சிகிச்சை நிபுணர்கள் தீர்மானித்து , அத்தகைய சிகிச்சையை மேற்கொண்டு நிவாரணம் வழங்குவார்கள்.
இதனால் முதுகு தண்டுவடப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் சத்திர சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கும் நவீன சத்திர சிகிச்சையை மேற்கொள்ளும் போது உங்களுக்கான நிவாரணம் விரைவாகவும், நிறைவாகவும் கிடைக்கக் கூடும்.
வைத்தியர் விக்னேஷ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM