இன்றைய திகதியில் எம்மில் பலரும் வாய்ப்பு கிடைப்பது என்பதே அரிதாக இருக்கும் போது கஷ்டப்பட்டு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற திட்டமிடும் போது எதிர்பாராத தருணங்களில் தடையும் , தாமதமும் உண்டாகும்.
இதன் பின்னணி குறித்து எம்மால் துல்லியமாக அவதானிக்க இயலாது. அதற்கான பொறுமையும், நிதானமும் இருக்காது என்பது யதார்த்தம்.
இந்தத் தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் உங்களின் லட்சியத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அல்லது லட்சிய பாதையில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக தடையும் தாமதங்களும் ஏற்பட்டால் அதனை நீக்குவதற்கு பிரத்யேக வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள்.
இதுபோன்ற தருணங்களில் வியாழக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் ஏழு மணிக்குள்ளாக அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு அல்லது ஆஞ்சநேயரின் ஆலயத்திற்கு சென்று ,பதினோரு வெற்றிலை மாலைகளையும், வெண்ணையையும் சாற்றி, 'தடைகளும் தாமதங்களும் தவிடு பொடியாக வேண்டும்.
எண்ணிய எண்ணங்களில் சித்தி பெற வேண்டும் ' என பிரார்த்தனை செய்யுங்கள். இதனுடன் நாளாந்தம் காலையிலோ அல்லது மாலையிலோ தவறாமல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 'அனுமன் சலீசா ' எனும் பக்தி பாடலை வாசியுங்கள் அல்லது அந்தப் பாடலை ஒலிக்க விட்டு கேளுங்கள்.
இதன் காரணமாக அனுமானின் அதிர்வலை உங்களுக்குள் ஏற்பட்டு, உங்களுக்கு தொல்லையாகவும் தடையையும், தாமதத்தையும் ஏற்படுத்தும் அந்த எதிர்மறையான ஆற்றலை அழித்து உங்களை வெற்றி நோக்கி சாதகமாக பயணிக்கச்செய்யும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM