சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'ஹீரோ 'படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், சிலம்பரசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ' மாநாடு ' படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். இவர் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ' லோகா' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் டொமினிக் அருண் இயக்கத்தில் உருவாகி வரும் ' லோகா ' எனும் திரைப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷனுடன் ' பிரேமலு ' பட புகழ் நடிகர் நஸ்லென் நடித்திருக்கிறார் .
இவர்களுடன் சந்து சலீம் குமார் , அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். சுப்பர் ஹீரோ ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை நடிகர் துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
திருமணத்திற்குப் பிறகு கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக அதிரடி எக்சன் நாயகியாக நடித்திருப்பதால் ' லோகா ' படத்திற்கு மலையாள திரையுலகில் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகிலும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM