முன்னணி நட்சத்திர இயக்குநர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் 'ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுன் எக்சன் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பொலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோன் நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பிரத்யேக புகைப்படங்களுடன் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இந்திய அளவில் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறன் முதன் முறையாக சர்வதேச அளவிலான திரைப்படமாக தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தில் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகளில் தற்போது சர்வதேச தரத்திலான வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பக் குழுவினர் முழுமையாக ஈடுபட்டு வருகிறார்கள் என்பதும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் தொடர்ச்சியாக வெளியிட உள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தானா - தேசிய அளவில் புகழின் உச்சத்தை எட்டியதால் ... அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் தீபிகா படுகோனின் புகழும் சர்வதேச அளவிற்கு உயரும் என அவருடைய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM