அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

09 Jun, 2025 | 05:07 PM
image

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான அதர்வா கதையின் நாயகனாக நடித்து, எதிர்வரும் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும்' டி என் ஏ ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' ஃபீலிங் பாட்டு..' எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டி என் ஏ ' எனும் திரைப்படத்தில் அதர்வா, நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக், விஜி சந்திரசேகர் , சேத்தன்,  ரித்விகா , சுப்பிரமணியம் சிவா , கருணாகரன், 'பசங்க ' சிவக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். பார்த்திபன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஸ்ரீ காந்த் ஹரிஹரன்-  சத்ய பிரகாஷ் - அனல் ஆகாஷ் - பிரவீண் சைவி - சகி சிவா மற்றும் ஜிப்ரான் வைபோதா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். உணர்வு பூர்வமான படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் இடம்பெற்ற 'மாமன் பாடுற ஃபீலிங் பாட்ட..' எனும் முதல் பாடலை எழுதி, இசையமைத்து, பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் சகி சிவா. இந்தப் பாடல் - காதலில் ஏற்பட்ட பிரிவால் வாடும் காதலர் பாடுவது போல் இருப்பதாலும் மதுபான கூடத்தின் பின்னணியில் இடம் பெறுவதாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் துள்ளலிசையுடன் இருப்பதாலும் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியுடன் இணைந்த...

2025-06-17 16:33:32
news-image

டிஸ்னி- பிக்ஸார் நிறுவனத்தின் 'எலியோ' படத்தின்...

2025-06-17 16:02:32
news-image

விமல் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு...

2025-06-17 16:02:06
news-image

பிரபல நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இலங்கை...

2025-06-17 13:25:33
news-image

பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ்...

2025-06-16 17:29:40
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஹும்' படத்தின் இசை...

2025-06-16 16:38:44
news-image

தயாரிப்பாளர் எம். கார்த்திகேசன் எழுதி, நடித்து,இயக்கும்...

2025-06-16 16:35:20
news-image

அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் இணைந்து...

2025-06-16 16:26:19
news-image

புதுமுக கலைஞர் பிருத்விராஜ் ராமலிங்கம் நடிக்கும்...

2025-06-16 16:22:10
news-image

தனுஷ் - நாகார்ஜுனா இணைந்திருக்கும் 'குபேரா'...

2025-06-16 15:52:28
news-image

பேட்ரியாட் படப்பிடிப்பிற்காக மோகன்லால், குஞ்சாக்கோ போபன்...

2025-06-15 16:13:23
news-image

மிஷ்கின் குரலில் ஒலிக்கும் 'லவ் மேரேஜ்'...

2025-06-14 19:14:59