கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Published By: Digital Desk 2

09 Jun, 2025 | 04:33 PM
image

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி நடித்து வரும்' சர்தார் 2 ' படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்திருக்கிறார்கள்.

'இரும்புத்திரை', 'ஹீரோ', 'சர்தார்' என வெற்றி படங்களை இயக்கி ஹாட்ரிக் அடித்த இயக்குநர் பி. எஸ். மித்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'சர்தார் 2 '  திரைப்படத்தில் கார்த்தி, மாளவிகா மோகனன், எஸ். ஜே. சூர்யா, ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன், யோகி பாபு, ஷா ரா, விடிவி கணேஷ், பாபு அண்டனி, ஓ ஏ கே சுந்தர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

ஜோர்ஜ் சி . வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஐவி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். லக்ஷ்மன் குமார் & இஷான் சக்சேனா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் அறிமுக காணொளி வெளியாகி நான்கு மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. விரைவில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2026-07-15 15:11:37
news-image

ஹாரர் கொமடியாக உருவாகும் 'இருள் சூழும்...

2026-07-15 15:06:51
news-image

சரத்குமார் 171

2026-07-15 15:04:54
news-image

அருள்நிதி நடிக்கும் 'அருள்வான்' படத்தின் அப்டேட்

2026-07-14 17:21:12
news-image

ட்ரெயின்' படத்தை கமல்ஹாசனால் கூட நடித்திருக்க...

2026-07-14 16:42:50
news-image

புதுமுகங்கள் நடிக்கும் 'ஆண்ட' டைட்டில் லுக்...

2026-07-14 16:40:34
news-image

கல்லூரி மாணவர்களின் ரீயூனியன் கதையை இயக்கும்...

2026-07-14 15:59:48
news-image

ஞானபீட விருதை பெற்ற கவிப்பேரரசு வைரமுத்து

2026-07-14 15:58:27
news-image

டொக்டர் சிவராஜ் குமார் நடிக்கும் 'வெல்கம்...

2026-07-14 15:37:24
news-image

நடிகர் பகத் பாசில் நடிக்கும் 'டோன்ட்...

2026-07-13 17:15:25
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும்...

2026-07-13 16:38:42
news-image

ஆங்கிலோ- இந்திய சமூக மக்களின் வாழ்வியலை...

2026-07-13 16:35:45