சண்முக பாண்டியன் விஜயகாந்த் நடிப்பில் தயாரான ' படைத்தலைவன் ' எனும் திரைப்படம் - கடந்த மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு எதிர்பார்த்த அளவிற்கு பட மாளிகைகளின் எண்ணிக்கையும் , திரையிடுவதற்கான திரைகளும் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திட்டமிட்ட திகதியில் இப்படம் வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பட மாளிகை வெளியீட்டு உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றி, தமிழகத்தில் எதிர்வரும் 13 ஆம் திகதியன்று 500க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியிடுகிறது.
வி ஜே கம்பைன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் யு. அன்பு இயக்கத்தில், நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'படைத்தலைவன்'. அடர்ந்த வனப்பகுதியில் வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்ய இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இப்படத்தில் வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக வெளியீட்டு உரிமையை விஜயகாந்த் உறவினரான எல். கே. சுதீஷ் கைப்பற்றி திரைப்படத்தை வெளியிடுகிறார்.
இந்த முறை சண்முக பாண்டியன் விஜயகாந்த் திரையில் தோன்றி தன் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை வசப்படுத்துவார் என அவருடைய ரசிகர்களும் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM