(எஸ்.ஆர்.லெம்பேட்)
மன்னார் பள்ளிமுனையில் உள்ள பெருக்க மரம் சுமார் 800 வருடங்கள் பழமை வாய்ந்தது. 10.50 மீற்றர் உயரமும் 21.10 மீற்றர் சுற்றளவும் கொண்ட இந்த மரம் அரேபிய வணிகர்களால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.
அரேபியர் காலத்துக்கு உரித்தானதாக மன்னார் மாவட்டத்தின் பள்ளிமுனை கிராமத்தின் பிரதான வீதியின் அருகில் அமைந்துள்ள பெருக்க மரம் தென்னிலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மன்னாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.
பயோபாப் (BAOBAB) என்பது இந்த மரத்தின் பெயர். இந்த இனப்பெருக்க மரம் தென்னாசியாவிலேயே மிகப்பெரிய சுற்றளவை உடையது.
இது மிகவும் பிரமாண்டமானதாக மட்டுமன்றி அழகான தோற்றத்திலும் காணப்படுகிறது. இதனால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மன்னாருக்கு வருகைதந்து மறக்காமல் இந்த மரத்தை வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.
2003இல் நடத்தப்பட்ட ஆய்வின்படி, பயோபாப் மரம் எனப்படும் பெருக்க மரங்களின் எண்ணிக்கையை நோக்குகையில், இலங்கையில் சுமார் 40 மரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவற்றில் 34 மரங்கள் மன்னார் பகுதியில் உள்ளன என தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இம்மரத்தின் விட்டம் பெரிதாக காணப்படுவதால் இதனை பெருக்க மரம் என்கின்றோம். இதற்கு விசேடமாக, “இயற்கை தந்த நீர்க் கலசம்” என்றொரு பெயரும் உண்டு.
ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன்னர் அராபிய வர்த்தகர்களால் இலங்கைக்கு இந்த மரம் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை இந்த மரம் அதிகமாக கவர்ந்துள்ள நிலையில், மன்னாருக்கு வருகை தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மன்னார் பள்ளிமுனை கிராமத்துக்கு தவறாமல் செல்வதே, இந்த பருத்த பெருக்க மரத்தின் விசாலமான தோற்றத்தை பார்ப்பதற்கு என்றுதான் சொல்லவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM