வைத்தியசாலை கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை கௌவிச் சென்ற நாய்

Published By: Digital Desk 2

09 Jun, 2025 | 03:34 PM
image

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் அமைந்துள்ள அரச வைத்தியசாலையில், கழிப்பறையிலிருந்து பிறந்த சிசுவின் சடலத்தை தெரு நாய்கள் கௌவிச்சென்று கடித்துச் சிதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (06) , வைத்தியசாலையின் கழிப்பறை அருகே நாய் ஒன்று குழந்தையின் சடலத்தை கௌவிக்கொண்டு செல்வதை பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கண்டுள்ளார். உடனடியாக குழந்தையின் சடலம் மீட்கப்பட்டபோதிலும்,  உடல் பகுதியளவு சிதைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

சி.சி.ரி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில், 17 வயது இளம்பெண் ஒருவர் வைத்தியசாலை கழிப்பறையில் பிரசவித்துவிட்டு பின்னர், இன்னொரு நபருடன் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதேவேளை, வைத்தியசாலையின் சில வாயில்கள் திறந்த நிலையில் இருந்ததினால், தெரு நாய்கள் உள்ளே நுழைய முடிந்ததாகக் கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-16 09:44:46
news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56
news-image

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும்...

2025-06-16 07:58:13
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-15 17:36:31
news-image

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த வயோதிபர்

2025-06-15 14:55:02
news-image

புற்றுநோயால் தாய் மரணம்; விமான விபத்தில்...

2025-06-15 14:07:49
news-image

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில்...

2025-06-15 13:31:43
news-image

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக...

2025-06-15 12:49:32
news-image

ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல்...

2025-06-15 12:38:36
news-image

மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது -...

2025-06-15 12:14:28
news-image

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து - 7...

2025-06-15 10:30:20