கிழக்கு மாகாணத்திலே ஆயிரக்கணக்கான அடியார்கள் தீமிதிக்கும் மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்ரகாளி அம்பாள் தேவஸ்தான புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஞ்சதல ராஜ கோபுரத்திற்கான மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருஞ்சாந்தி விழா ஞாாயிற்றுக் கிழமை (08) காலை மிகவும்பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே முதல் தடவையாக 121 அடி நவதல சோழர் காலத்து பரம்பரையில் அமைக்கப்பட்ட ராஜ கோபுரத்திற்கான கும்பாபிஷேக குடமுழுக்கு கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ கு. விநாயகமூர்த்தி குருக்கள் தலைமையில் வெகு சிறப்பாக இடம் பெற்றது.
கடந்த நான்காம் திகதி கிரிகைகள் ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து ஆறாம் ஏழாம் திகதிகளில் எண்ணெய் காப்பு இடம்பெற்றதைத் தொடர்ந்து ஞாயிற்றுக் கிழமை காலை விநாயகர் வழிபாடு , விசேட பூஜைகள் இடம்பெற்றன.
நாட்டியாஞ்சலி இடம்பெற்று வேதபாராயணம், முழங்க மங்கள வாத்தியம் இசைக்க, ஆயிரக்கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன் பக்தர்களின் ஆனந்தக் கண்ணீர் மல்க உலங்கு வானூர்தியிலிருந்து அம்மாளுக்கு பூச்சொரிய ஸ்ரீ பத்ரகாளியம்மாளுக்கு விநாயகர் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கும் கும்பாபிஷேக பெருவிழா இடம் பெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM