கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றியீட்டிய மற்றும் பட்டியல் ஆசனங்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) திருகோணமலையில் உள்ள மாவட்ட கட்சி பணிமனையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
கட்சியின் மாவட்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் முன்னிலையில் உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
இம்முறை நடை பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குச்சவெளி, தம்பலகாமம், வெருகல், மூதூர், திருகோணமலை மாநகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழ் அரசு கட்சி சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டு போட்டியிட்டுருந்தனர்.
இதில் திருகோணமலை மாநகர சபையின் மேயராக தமிழ் அரசு கட்சியை சார்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM