குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

Published By: Rajeeban

08 Jun, 2025 | 11:17 AM
image

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படும்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை  நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,என தெரிவித்துள்ள ஷெரீவ் ரொபேர்ட் லூனா இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை சட்டவிரோதமான ஒன்றுகூடல் என அறிவித்து அனைவரையும் அமைதியாக கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் உயிராபத்தை  ஏற்படுத்தாத வெடிபொருட்களை பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காயவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரமவுண்டின் வீதிகளில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.சிலர் சட்டஅமுலாக்கல் பிரிவினரின் பேருந்துகளில் ஏற முயன்றனர் சிலர் கற்களையும் ஏனைய பொருட்களையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் வாகனங்களை நோக்கி எறிந்தனர் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

பாரமவுண்டிலும் கொம்டன் நகாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன,நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார் ஒன்றின் அருகில் கூடிநின்று அதனை தீயிட்டு கொழுத்தினார்க்ள் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தூரத்திலிருந்து பார்த்தனர் அவர்களில் சிலர் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான உடைகளை அணிந்திருந்தனர்,அந்த கார் தீப்பிடித்த பத்து நிமிடங்களிற்கு பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன,என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வெளியே மீண்டும் சிறிய கூட்டமொன்று கூடியது, 830 மணிவரை அவர்கள் அங்கேயே நின்றனர், பின்னர் திடீரென அங்கு தோன்றிய சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுபிரயோகத்தில் ஈடுபட்டனர்,என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிபா உலகக் கிண்ண இறுதிப் போட்டி:...

2026-07-19 17:08:35
news-image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவைக் கைது செய்வது...

2026-07-19 16:28:41
news-image

அமெரிக்காவில் அண்ட்ரூ டேட் மற்றும் டிரிஸ்டன்...

2026-07-19 15:46:07
news-image

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4...

2026-07-18 15:17:31
news-image

சீனாவில் நிலச்சரிவு: 8 பேர் பலி;...

2026-07-18 10:24:03
news-image

உகாண்டாவில் கல்வி சுற்றுலா சென்ற பஸ்...

2026-07-18 09:26:16
news-image

தெற்கு மெக்சிகோவில் 7.3 ரிக்டர் அளவிலான...

2026-07-17 22:32:10
news-image

தொழிற்கட்சியின் தலைவராக அண்டி பர்ன்ஹாம் தெரிவு;...

2026-07-17 16:16:53
news-image

இஸ்ரேல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது!  

2026-07-17 14:32:09
news-image

நியூசிலாந்தில் முதல்முறையாக உள்நாட்டுப் பறவைக்கு H5N1...

2026-07-17 13:34:01
news-image

இந்தியாவில் முதலாவது ஹைட்ரஜன் ரயில் சேவை...

2026-07-17 13:01:56
news-image

கொங்கோவில் எபோலா பரவல் தீவிரம்: சர்வதேச...

2026-07-17 12:33:31